Friday, 18 October 2013

Body mass index

English BMI Formula
BMI = ( Weight in Pounds / ( Height in inches x Height in inches ) ) x 703
Metric BMI Formula
BMI = ( Weight in Kilograms / ( Height in Meters x Height in Meters ) )

BMI Categories:
*.Underweight = <18.5
*.Normal weight = 18.5–24.9
*.Overweight = 25–29.9
*.Obesity = BMI of 30 or greater

--
J.PRABU

Thursday, 29 August 2013

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும்

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று
சொல்வதற்கு காரணம்..!
நண்பர்களே.. தயவுசெய்து இதனை அனைவருக்கும் பகிருங்கள் !!
இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்துகண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ
கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.
சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள்நமது உடலிலும்
உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது.
பிறகுபார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை
தொடுகின்ற குழந்தைகளுக்கோநிச்சயம் பாதிப்பு வரும். அதனால்தான் சாவுக்கு
சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.
இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு
வேண்டப்பட்டவராகஇருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும்
இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம்
வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர்
உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும்,
தைரியமும் கிடைக்கும்.
இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை
செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி
குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது
அவர்கள் கொள்கை.

--
J.PRABU

மருத்துவம் - உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்களே இன்றைய சூழ்நிலையில் இல்லை எனும் காலம்
வெகு தூரத்தில் இல்லை எனலாம்...
கவலையும், கோபமும் தான் மனிதனை கொல்லும் முதல்
எதிரிகள்...எதற்குஎடுத்தாலும் கோபம், எரிச்சல் ஆத்திரம் தான் அனைவரின்
வாழ்விலும் இப்போது நிரம்பி வழிகிறது...அமைதி என்பது கடுகளவு கூட
இருப்பது இல்லை..
கோபம், அதீத வேலை பளு,எரிச்சல், ஆத்திரம், அதனால் ஏற்படும் மன உளைச்சல்
ஆகியவை உயர் இரத்த அழுத்தம் வர காரணங்கள் என்றாலும் மிக முக்கியமான
காரணம் மலச்சிக்கல் தான்.. எளிதில் ஜீரணமாகாத உணவை உண்பதன் மூலம் இதயம்
அதிக அளவில் வேலை செய்ய நாமே காரணமாகிறோம்..
நம் உடலுக்கு தகுந்த உணவு என்று உணர்ந்து உண்டு வந்தால் இதயத்திற்கும்
ஓய்வு கொடுக்கலாம்....மேலும், மனச்சுமை, மற்றும் வேலையை சிறிது
குறைத்துக் கொண்டால் சரியாகிவிடும்...
"தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்"
இது உயர் இரத்த அழுத்தம் உடையவர்களுக்கும், அதிகமாக கோபப்பட்டு உயர்
இரத்த அழுத்தம் வர வரவழைத்துக் கொள்ளப் போகிறவர்களுக்கும் அன்றே
திருவள்ளுவர் சொல்லி வைத்து இருக்கிறார்....
ஆரம்ப காலங்களில் தோன்றும் சிறு சிறு வியாதிகளான தலைவலி, மயக்கம்,மங்கிய
கண்பார்வை, குமட்டல், வாந்தி, தைராய்டு, சிறுநீரகப்பை கோளாறுகள்,
சர்க்கரை, தொப்பை (Obesity), சுவாசகோளாறுகள்,நெஞ்சுவலி எனும் இந்த
வியாதிகளே சில நேரங்களில் உயர் இரத்த அழுத்தம் வரவும், கூடவும்
காரணமாகிறது...
ஆரம்ப நிலையிலே இதற்கான மூல காரணம் என்ன எந்த உறுப்பு பாதித்து
இருக்கிறது என்று ஆராய்ந்து சரி செய்யாவிட்டால் இப்படிப்பட்ட நாட்பட்ட...
உயர் இரத்த அழுத்தமே…..கீழ்க்கண்ட மிகப்பெரிய வியாதிகளை உருவாக்கிஒரு
மனிதனை தன்னிலை இழக்கச் செய்து வாழ்வை முடக்கச் செய்யும் காரணிகள்
.... நெஞ்சுவலி, இதயம் செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய்கள், சிறுநீரக
செயலிழப்பு, படிப்படியாக கண்பார்வை இழத்தல், நடக்கவே முடியாத அளவிற்கு
கால்களில் நிரந்தர வலி....இப்படி அடுக்கி கொண்டே போகலாம்......நாட்பட்ட
உயர் இரத்த அழுத்தம் இதயத்தையும், இரத்த குழாய்களையும் அதிக அளவில்
பாதித்து அதன் செயல்பாட்டை முற்றிலும் நசுக்கும்.
ஆனால் இப்படிப்பட்ட உயர் இரத்த அழுத்தத்திற்கு தீர்வும்
உண்டு..அதிகபடியான உடல் எடை இருந்தால் நாமே வீட்டிலேயே சரி
பண்ணிகொள்ளலாம்......
உணவை கொஞ்சம்..கொஞ்சமாக குறைத்து,அதிகபடியான கலோரிகளை எரிக்க 3௦
நிமிடங்கள் நடைபயிற்சி செய்தும்குறைக்கலாம்...
இதனால் அதிகபடியான கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல
கொழுப்பு அதிகமாகிறது....
நம் உடல் ஒவ்வொரு நொடியும் லட்சக்கணக்கான உயிரணுக்களை களைந்தும்,
உற்பத்தியும் செய்து கொண்டே இருக்கிறது... மேலும் தீர்வு என்று
பார்த்தால் திரும்பவும் புகைத்தல், குடி இரண்டையும் முற்றிலும்
தவிர்க்கவேண்டும்.
முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள், உடல் எடை கூடாமல் சீராக
வைத்துக் கொள்ளுவது, எதற்கு எடுத்தாலும் வரும் கோபம்,மனஉளைச்சல்
தவிர்த்து ...அமைதியானசூழ்நிலையில் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து
கொண்டால் எந்த வியாதியுமே நம்மிடம் அண்டாது....

--
J.PRABU

Sunday, 11 August 2013

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்...

1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல.
ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம்
உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில்
நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம்.
ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை
அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல
நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி
இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.
2. அடியாத மாடு படியாது.
விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம்
அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும்
என்பது தான்.
3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு
முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று
கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று,
கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம்
உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.
4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை
சேர்ந்துகொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து
ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன்
சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான்
கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து
பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும்சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன்
இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு
என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும்
பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள்
மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை
மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக்
கற்றுக் கொள்ள வேண்டும்.இதுவே பெண்களுக்கு அழகு.
6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன.
மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக
விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக
வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த
சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன்
சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால்நாயைக்
காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல்
தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.
7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்
விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி,
குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால்
பறந்து போகும் என்பது உண்மை.
8. போக்கத்தவனுக்குபோலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று
கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்குஅல்லது கற்று
கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.
9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது
(என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான்
பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும்
தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.
10. சேலை கட்டிய மாதரை நம்பாதே
விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள்.
சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு
ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.
11. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது
ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால்
கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில்
இறங்காதே என்பது தான் உண்மை


--
J.PRABU Follow in FB

மூன்று என்ற சொல்லினிலே... மிகக் கடினமானவை

மூன்றுண்டு:
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.
நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.
இழப்பு மூன்று வகையிலுண்டு:
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள்இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டுஇழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.
உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.


--
J.PRABU

Saturday, 10 August 2013

Miss use nnu solvaangale adutaan

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.
அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும்பாருங்க
இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது.
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான்அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக
படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா.
நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய
பிச்சிகிட்டு இருந்தாங்க.
அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான், உங்களை மாதிரி தான்
நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன
தப்பு...?
சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்லை, வேறொருவர்
நமக்கு அதை செய்யும் வரை..


--
J.PRABU

Wednesday, 7 August 2013

அடக்கத்தில் சிறந்தவர்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்
கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.
ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு
ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம்,"பார்த்தாயா, அந்த யானை
என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?"
என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக
இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி
விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."
தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள்அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்


--
J.PRABU

Tuesday, 6 August 2013

Today messages

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.
அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது,
பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்துகாயப்போட்டுக்கொ ண்டிருப்பது
ஜன்னல் வழியாகதெரிந்தது.
அதை பார்த்த மனைவி கணவனிடம் 'அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே
தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு' அப்படின்னு சொன்னா.
ஜன்னல் வழியேபார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல்வழியா பாத்து
மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம
இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு. திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப
ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு
துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.
அதுக்கு அந்த கணவன்'அது வேற ஒன்னும் இல்ல. இன்னைக்கு காலையிலசீக்கிரமா
எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்'
அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.
இதனால் நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா
நாமநெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூடஇருக்கலாம்


--
J.PRABU

நாம் தவிர்க்க வேண்டியவர்கள்

1. தாழ்வு மனப்பான்மையுடன்இருப்பவர்கள்
2. தாங்கள் முன்னுக்கு வந்தால் மட்டும் போதாது அடுத்தவர்கள் தோல்வி அடைய
வேண்டும் என நினைப்பவர்கள்
3. சம்மன் இல்லாமல் ஆஜராகி தேவையற்ற, அனேக சமயங்களில் உபயோகமற்ற
ஆலோசனைகள் தருபவர்கள்
4. தாம் செய்யும் ஒரு தவறுக்கும் பொறுப்பேற்காது,அதை மற்றவர்கள் தலையில்
கட்டுபவர்கள்
5. எமோஷனலாக பிளாக்மெயில் செய்பவர்கள்
6. கழுத்து மட்டும் குறைகளை சுமந்து யார் சாதாரணமாக எதையும் சொன்னாலும்
தன்னை தாக்குவதாக நினைத்து கொண்டு பிறாண்டுபவர்கள்


--
J.PRABU

காதலியிடம் நல்ல பெயர் வாங்க ஐடியா சில

காதல் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். இனிமையாக பேசும்
காதலர்கள் ஏனோ பெரும் சண்டை போடுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றார்கள்.
இப்படி நீங்களும் உங்கள் காதலியிடம் மாட்டிக் கொண்டிர்களா? அப்படியாயின்
இப் பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….
1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு sms அனுப்பணும்.
உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு
அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க
பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு
முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன்
சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன்
முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி
வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன்போல்ட்)
3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க.
எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு
பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…
4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ
கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி
பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப்
பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு
நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக்
விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை
எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட
சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்குகால் பண்ண
சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே
போகுதுன்னே தெரியாது.
6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக்
கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில்,
போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
7. "நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து
வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா
மன்னிப்பு கேட்டுக்குங்க)
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா முதலில் நீங்க ஓடர் பண்ணக்கூடாது.
மெனு கார்டை அவங்ககையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும்.
புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு
அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி
இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில
நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)
10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப
ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே
இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான்
ஆரம்பிக்குது.
இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க உங்கள் காதலும் பிரகாசமாய் இருக்கும்


--
J.PRABU

Monday, 5 August 2013

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்

உங்களுக்கு தெரியுமா???
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் சுவாரசியமான தகவல்:-
1) மொத்தம் 33000 சிற்பங்கள் உள்ளன
2) புதிதாக போட்டி இட்ட உலக அதிசயம் பட்டியலில் 30வது இடம்.
3) ஒரு நாளைக்கு குறைந்தது 15000 பேர் வருகை தருகிறார்கள், வெள்ளி கிழமை
மட்டும் 25000 பேர்.
4) ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 1கோடி.


--
J.PRABU

தமிழ்நாட்டின் வாகன பதிவு எண்கள்

1 TN01 - CHENNAI(CENTRAL)
2 TN02 - CHENNAI(NORTH-WEST)
3 TN03 - CHENNAI(NORTH-EAST)
4 TN04 - CHENNAI(EAST)
5 TN05 - CHENNAI(NORTH)
6 TN06 - CHENNAI(SOUTH-EAST)
8 TN09 - CHENNAI(WEST)
9 TN10 - CHENNAI(SOUTH-WEST)
10 TN11 - RTO TAMBARAM
11 TN11Z - SOLLINGANALLUR
12 TN16 - RTO, TINDIVANAM
13 TN18 - REDHILLS
14 TN18Z - AMBATTUR
15 TN19 - CHENGALPATTU
16 TN19Z - MADURANTAKAM
17 TN20 - TIRUVALLUR
18 TN20Y - POONAMALLE
19 TN21 - KANCHEEPURAM
20 TN21W - SRIPERUMBUDUR
21 TN22 - MEENAMBAKKAM
22 TN23 - VELLORE
23 TN23T - GUDIYATHAM
24 TN23Y - VANIYAMBADI
25 TN24 - KRISHNAGIRI
26 TN25 - TIRUVANNAMALAI
27 TN25Z - ARANI
28 TN28 - NAMAKKAL
29 TN28Y - PARAMATHIVELLORE
30 TN28Z - RASIPURAM
31 TN29 - DHARMAPURI
32 TN29W - PALACODE
33 TN29Z - HARUR
34 TN30 - SALEM(WEST)
35 TN30W - OMALUR
36 TN31 - CUDDALORE
37 TN31U - CHIDAMBARAM
38 TN31V - VIRUDHACHALAM
39 TN31Y - NEYVELI
40 TN32 - VILLUPURAM
41 TN32W - KALLAKURICHI
42 TN32Z - ULUNDURPET
43 TN33 - ERODE
44 TN34 - TIRUCHENCODE
45 TN36 - GOBICHETTIPALAYAM
46 TN36W - BHAVANI
47 TN36Z - SATHIYAMANGALAM
48 TN37 - COIMBATORE(SOUTH)
49 TN38 - COIMBATORE(NORTH) -
50 TN39 - TIRUPPUR(NORTH)
51 TN39Z - AVINASHI
52 TN40 - METTUPALAYAM
53 TN41 - POLLACHI
54 TN42 - TIRUPUR(SOUTH)
55 TN42Y - KANGAYAM
56 TN43 - OOTY
57 TN43Z - GUDALUR
58 TN45 - TRICHIRAPPALLI
59 TN45Y - THIRUVERUMBUR
60 TN45Z - MANAPPARAI
61 TN46 - PERAMBALUR
62 TN47 - KARUR
63 TN47Z - KULITHALAI
64 TN48 - SRIRANGAM
65 TN48Z - THURAIYUR
66 TN49 - THANJAVUR
67 TN49Y - PATTUKOTTAI
68 TN50 - THIRUVARUR
69 TN50Z - MANNARGUDI
70 TN51 - NAGAPATTINAM
71 TN51Z - MAYILADURAI
72 TN52 - SANGARI
73 TN52Z - METTUR
74 TN54 - SALEM(EAST)
75 TN55 - PUDUKOTTAI
76 TN55Z - ARANTHANGI
77 TN56 - PERUNDURAI
78 TN57 - DINDIGUL
79 TN57R - OTTANCHATRAM
80 TN57V - VADASANDUR
81 TN57Y - BATALAGUNDU
82 TN57Z - PALANI
83 TN58 - MADURAI(SOUTH)
84 TN58Z - THIRUMANGALAM
85 TN59 - MADURAI(NORTH)
86 TN59V - VADIPATTI
87 TN59Z - MELUR
88 TN60 - THENI
89 TN60Z - UTHAMAPALAYAM
90 TN61 - ARIYALUR
91 TN63 - SIVAGANGA
92 TN63Z - KARAIKUDI
93 TN64 - MADURAI(CENTRAL)
94 TN65 - RAMANATHPURAM
95 TN65Z - PARAMAKUDI
96 TN66 - COIMBATORE(CENTRAL)
97 TN67 - VIRUDHUNAGAR
98 TN67U - SIVAKASI
99 TN67Z - SRIVILIPUTHUR
100 TN68 - KUMBAKONAM
101 TN69 - TUTICORIN
102 TN69Y - TIRUCHENDUR
103 TN69Z - KOVILPATTI
104 TN70 - HOSUR
105 TN72 - TIRUNELVELI
106 TN72V - VALLIOOR
107 TN73 - RANIPET
108 TN73Z - ARAKONAM
109 TN74 - NAGERCOIL
110 TN75 - MARTHANDAM
111 TN76 - TENKASI
112 TN76V - AMBASAMUTHIRAM
113 TN76Z - SANKARANKOIL
114 TN77 - ATTUR
115 TN77Z - VALAPADI
116 TN78 - DHARAPURAM
117 TN78Z - udumalpet


--
J.PRABU

கடவுளும் குழந்தையும்

இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின்
பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம்
காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.
வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது
நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது,
அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது,
வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை
அழைத்தது.
குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ
சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.
கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்
குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்
கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா.
குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு
பார்த்துக் கொள்வார்.
கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு
தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது
அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.
குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன்
என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக்
கூட புரிந்துக் கொள்ள முடியாது.
கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த
தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக்
கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.
குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது)
ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.
கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை
இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.
குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள்
பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.
கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு
செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.
குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.
கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு
செய்திருக்கும் அந்த தேவதையிடம்நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா
என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும்
உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீஎன்னைப்
பார்க்க மாட்டாய்.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின
குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச
நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு
செய்திருக்கும்அந்த தேவதையின் பெயரையாவது சொல்
கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு
செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று
அழைப்பாய்.
கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின்
மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.
குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது..


--
J.PRABU

புத்தர்

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்தார்.
ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்திலோ
வசைமொழிகளுடன் அவமானப்படுத்தல்களும் அரங்கேறின.
புத்தரோ அமைதியாய் கடந்து செல்ல முற்பட்டார்.
அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.
"யோவ்.. இவ்ளோ திட்டறோமே, சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?" என்று
கடைசியில் கேட்டேவிட்டார்கள்.
புத்தர் சிரித்துக்கொண்டே..
"இதுக்கு முன் நான் சென்ற கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள்
கொடுத்து, புகழாரம் சூட்டினார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என
அத்தனையும் திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே வசை மொழிகள்
தருகிறீர்கள்.இதையும் நான் கொண்டு செல்லப் போவதில்லை. இங்கே தான்
தந்துவிட்டுச் செல்லப்போகிறேன். எனவே எதுவும் என்னை பாதிக்கச் செய்யாது"
என்றாராம்.
காயப்படுவதும், காயப்படுத்துவதும் நம் மனதின் பக்குவத்தை பொறுத்தே அமையும்.


--
J.PRABU

Sunday, 21 July 2013

அஜித்

இது நடிகர் அஜித்தை பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரை அல்ல அஜித்
பற்றிய சில உண்மை வரிகள்:யார் பின்பலமும் இல்லாமல் தமிழ் சினிமா துறைக்கு
வந்த இளைஞன் . மெக்கானிக்காக இருந்த இவர் பைக் ஓட்டுவதில் பிரியர் . பைக்
ரேஸில் சேர பணத்துக்காக திரைத்துறையை தேடிவந்தவர் . பல இடம் தனியாக ஏறிபல
அவமானங்களுக்கு பின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும் இவர் வசன உச்சரிப்பு யாருக்கும் பிடிக்கவில்லை , பல
இயக்குநர்களின் வீட்டில் வாட்ச்மேன் போல காத்துகிடந்து வாய்ப்பு பெற்று
தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். நடித்ததிற்கு சம்பளம் கேட்டு
இயக்குநர்கள் வீடு தயாரிப்பாளர்வீடு என பகல் இரவாக அலைந்தார். பின்
கிடைத்த பணத்தை வைத்து ரேஸில் சேர்ந்தார் .
ரேஸில் மிக பெரிய விபத்துநடக்க பல அறுவை சிகிச்சைகளோடு
உயிர்திரும்பினார். பின் ரேஸ் ஆசையை விட்டுவிட்டு நடிப்பை
தேர்ந்தெடுத்தார்.
.
அவர் நடித்த ஆசை படம் மூலம் நல்ல நடிகன் என்ற பெயர் பெற்றார். தொடர்ந்து
பல தோல்வி படங்கள் சில வெற்றிபடங்கள் கொடுத்தவந்தார்.ஆனாலும் இவருக்கு
வசனமே வராது என்று பல நக்கலடித்தனர். பின் வாலி படம் மூலம் தன் கண்களும்
வசனம் பேசுமடா என்று சொல்லாமல் கூறி அந்த நடிப்புக்காக விருதுகளை
பெற்றார்.
ரசிகர் கூட்டம் உருவாகியது.நாளடைவில் அஜித்தை தல என்று ரசிகர்கள் கூப்பிட
ஆரம்பித்தனர். பல திரைப்படங்களுக்காக தென்னிந்திய ஆஸ்கார் என்றழைக்கபடும்
பிலிம்பேர் விருதுகளை பெற்றார்.
அதிக விருதுகளை வென்ற ஒரே இளம் கதாநாயகன் என்ற சிறப்பை பெற்றார். தன்
காதலி நடிகை ஷாலினி அவர்களை திருமணம் செய்துகொன்டார்.கார் ரேஸில் கலந்து
பல பதக்கங்களை வென்றார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
பல அறுவை சிகிச்சைக்கு பின்னரும் தன் படங்களில் வரும் உயிருக்கு ஆபத்தான
சன்டை காட்சியில் டூப் போடாமல் நடித்தார்.
பின் திடிரென்று ரசிகர்கள் நலன் கருதி ரசிகர் மன்றங்களை கலைத்தார் .
அப்போது இனி அஜித் அவ்ளோதான் என்ற பலர் கூறினர். கலைத்தாலும் அவரது 50வது
திரைபடத்திற்கு
கூடிய கூட்டத்தை பார்த்து தமிழ்திரையுலகம்மிரண்டுபோனது.
திரைதுறையில் ரஜினிக்கு பின் அதிகம் ரசிகர்களை கொண்டவர். நல்லமனம் கொண்ட மனிதன்
ரசிகனை சுயநலத்துக்காக பயன்படுத்தாமல் அவன் வாழ்க்கையில் அக்கறை கொண்ட ஒரே நடிகர்.
எங்கும் எதற்கும் பயப்படாதவர்.நேர்பட பேசும் தைரியசாலி. இதை தவிர
ஹெலிகாப்டர்ஒட்டுவதற்கு லைசென்ஸ் வைத்துள்ளஒரே ஆசிய நடிகர் என்ற சிறப்பை
பெற்றவர்.
அன்று எவர் துணையும் இல்லாம் சினிமாவுக்கு வந்த அஜித் இன்று
தமிழ்நாட்டின் தாரக மந்திரமான தலயாக திகழ்கிறார்

--
J.PRABU

Thursday, 18 July 2013

A Awesome Story

ஒரு சின்ன கற்பனை.
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.
பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில்
86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து
எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின்
செலவிற்காக 86400 ரூபாய்வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கிஇந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல்
நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக்
கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.
இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும்
வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்
இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால் அவ்வளவு பணத்தையும்
உங்களுக்காக மட்டுமேசெலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -
அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து
உபயோகிப்பீர்கள்தானே?
உண்மையில் இது ஆட்டமில்லை - நிதர்சனமான உண்மை
ஆம்
நம் ஒவ்வொருவருக்கும் இப்படியானஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான்
அதை கவனிக்கவில்லை.
அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் - காலம்.
ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின் அதியுன்னத
பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து
வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.
நேற்றைய பொழுது போனது போனது தான்.
ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில்
86400நொடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும்.
அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான
பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?
இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம்
கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.
எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக இருங்கள்
-சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.


--
J.PRABU

Friday, 14 June 2013

அன்பின் தேவை

மகன் : அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?
தந்தை : கண்டிப்பா.. என்ன கேளு..?
மகன் : 1 மணி நேரத்திற்கு எவ்ளோ சம்பாரிப்பிங்க ?
தந்தை : அது உனக்கு தேவை இல்லாத விஷயம், நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?
மகன் : சும்மா தெரிஞ்சிக்கத்தான்சொல்லுப்பா
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன்
மகன் : "ஓ (தலைகுனிந்தவாறே) அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"
தந்தைக்கு கோபம் வந்தது ...
தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??
ஒழுங்கா போய் படுத்து தூங்கு நான் இங்க உங்களுக்காக நாய் போல
உழைக்குறேன்..."
அந்த சின்னப்பையன் அமைதியா அவன்
படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டா­ன் ..
அவன் தந்தை மகனின்
கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார். 1 மணிநேரம் சாந்தம்
அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று
முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ...
தந்தை : "தூங்கிட்டியாடா?"
மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான்
இருக்கேன் ..."
தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள்
பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ
கேட்ட 50 ரூபாய் .."
அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் ..
மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "
அப்புறம் அந்த
பணத்தை எடுத்து தலையணை அடியில்
வைக்க போகும்
போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள்
இருந்தன ..
அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் ..
அந்த சிறுவன் மெதுவாக
பணத்தை எண்ணி சரிப்பார்தான் ...
பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...
தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் ....
அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."
மகன் : "ஏன்னா தேவையான பணம் என்
கிட்ட இல்ல ...
இப்போ இருக்கு ....
கேளுங்கப்பா இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு ....
இதை நீங்களே வச்சிக்கோங்க இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா
? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்குவாங்க நான் உங்ககூட சேர்ந்து
இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ...
அதைக் கேட்டு ஒரே ஷாக்... விறைத்துப் போய் நின்றார். அப்போது தான்
உணர்ந்தார், மேலும்ஒரு கடமை மீதமிருந்தது, தன் குடும்பத்திற்காக.
அன்புக்கு அங்கு தேவை இருந்தது.
தனது குடும்பத்திற்காக ஒரு சில நிமிடங்களை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
வாழ்வதன் அர்த்தம் புரியவரும், உழைப்பின் பெறுமானம் தெரியவரும், அன்பின்
தேவை உணரப்படும் போது.

--
J.PRABU

Wednesday, 5 June 2013

நீதிக்கதை

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப்
போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர்,
"மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப்
போனால் வெற்றி நிச்சயம்" என்று சொன்னார்.
கிருஷ்ணதேவராயர் ­ குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி
உஷாராகிவிடுவான் ­. அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான்
வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது.
தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.
தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். "எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே,
நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல
முடியுமா?" என்று கேட்டான்.
"இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன ­்" என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, "இந்த
விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?" என்று
கேட்டான்.
ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. "முடியும்.. முடியும்"என்று அலறினார்.
"அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும்
உங்களால் பொய்யாக்க முடியும்" என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.
கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.
வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை
வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக்
கனிந்து வரும் வெற்றிக்கனி

--
J.PRABU

Tuesday, 4 June 2013

உதவிசெய்து வாழ்வதே சொர்க்கம்

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன்.
ஆனால் யாருக்கும் உதவமாட்டான்.
அவனுக்கு சொர்க்கத்தையும் ­ நரகத்தையும் காண ஆசை வந்தது.
ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்கு ­க்
கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்.
முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில்
பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க
பதார்த்தங்களும் ­ இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, ­
சுவைமிக்க உணவுபரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில்எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையைநீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே
தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.
அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.
அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி
அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக்கருமியை சொர்க்கத்துக்கு ­ அழைத்துச் சென்றார்.
அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந ­்தது.
அங்கு இருந்தவர்களுக்க ­ும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள்
வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால் -
அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே
இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி
எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவ ­ா?
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ­ ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின்
வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் ­ உதவிசெய்து வாழ்வதே
சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும்சுகமாய் வாழ
நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும்
உதவிகள்பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்

--
J.PRABU

Sunday, 2 June 2013

மனித உறவுகள் மேம்பட.....

1.தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். (Ego)
2. அர்த்தமில்லாமில ­ும்,தேவையில்லாம ­ிலும் பின் விளைவு அறியாமலும்
பேசுக் கொண்டேயிருப்பதை ­ விடுங்கள். (Loose Talks)
3.எந்த விசயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள். (Diplomacy)
4.விட்டுகொடுங்க ­ள். (Compromise)
5.சில நேரங்களில் சில சங்கடங்களைசகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
(Tolerate)
6.நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள்.
(Adamant Arguments)
7.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் ­. (Narrow Mindedness)
8.உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே
சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying
Tales)
9.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள்.
­ (Superiority Complex)
10. அளவுக்கு அதிகமாய்,தேவைக் ­கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள் ­. (Over Expectation)
11.எல்லோரிடத்தி ­லும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ
இல்லையோ சொல்லிகொண்டிருக ­்காதீர்கள்.
12.கேள்விப்படுக ­ிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள ­்.
13.அற்ப விசயங்களையும் பெரிதுபடுத்தாதீ ­ர்கள்.
14.உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியா ­ய் இல்லாமல், கொஞ்சம்
தளர்த்திக்கொள்ள ­ுங்கள். (Flexibility)
15.மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள். (Missunderstand ­ing)
16.மற்றவர்களுக் ­கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை
பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)
17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும்கூட
நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
18.பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தைய ­ும், தேவையில்லாத
மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும்
காட்டுங்கள்.
19.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள். (Frankness)
20.பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று
காத்திருக்காமல் ­ நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.(Initiative)
21. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.
பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும

--
J.PRABU

Thursday, 23 May 2013

பூமியை காப்போம் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்

பிளாஸ்டிக் பையை ஏன் தவிர்க்க வேண்டும் ?
ஏழு காரணங்கள் :

1 . அழியும் இயற்க்கை வளம்:
பிளாஸ்டிக் என்பது பாலி எத்திலீன் .இது இயற்கை வாயு மற்றும்
பெட்ரோலியத்தில் ­ இருந்து தயாரிக்க படுவது . அமெரிக்கர்கள் ஒரு
வருடத்துக்குஉபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளை செய்ய 1 .2 கோடி பேரல்
எண்ணெய் தேவைபடுகிறது .அப்படியென்றால் ­ உலகம் முழுக்க ????
2 .சுற்றுபுறம் மாசடைதல் :
ஒரு பிளாஸ்டிக் பை நிலத்தில் அழிய ஆயிரம் வருடமும் நீரில் அழிய 450
வருடமும் தேவைபடுகிறது. அவ்வளவு வருடமும் அது என்ன செய்கிறது …. நிலத்தை
அடைத்து கொண்டு ….????
3 . ஒரு சதவிதத்துக்கும் ­ குறைவானஅளவே மறு சுழற்சி செய்யபடுகிறது:
ஆண்டொன்றிற்கு ஒரு மனிதன் 350 -400 பிளாஸ்டிக் பைகளை உபயோகபடுத்துகிற
­ான் . இவையெல்லாம் எங்கே செல்கின்றன என்று யோசித்தீர்களா ?
4 .உயிரினங்களுக்க ­ு ஆபத்து :
மிருகங்களும் கடல் வாழ் உயிரினங்களும் தெரியாமல் பிளாஸ்டிக் பையை உண்டு
இறந்து இருக்கின்றன ! கடல் ஆமைகள் பிளாஸ்டிக் பைகளை jelly fish என்று
நினைத்து உண்டு இறக்கின்றன.உயிரினங்களின் செரிமான குழாயில் இருந்து
கொண்டு செரிமானமாகமாகாத ­தால் அவை இறக்கின்றன !
5 .குழந்தைகள் பாதுகாப்பு :
US consumer product safety commision ஆண்டொன்றுக்கு 25 குழந்தைகள்
பிளாஸ்டிக்கை முகர்ந்து மூச்சு விட முடியாமல் இறப்பதாக தெரிவிக்கின்றது ­
! இதில் பெரும்பான்மை 12 மாதத்துக்கும் குறைவான குழந்தைகள் !
6 .நம் உணவில் கலக்கும் பிளாஸ்டிக் :
பத்து லட்சம் டன் = ஒரு வருடத்தில் தயாராகி தூக்கி எறியப்படும்
பிளாஸ்டிக் பைகளின்அளவு !
ஆடு ,மாடு , கோழி ,மீன் ஆகிய உயிரினங்கள் எதிர்பாராவிதமாக ­ ப்ளாஸ்டிக்கை
உண்பதால் மரணிக்கும் வாயிப்பு ஏற்படும் போது அவற்றை உண்ணும் மனிதனின்
உடலிலும் பிளாஸ்டிக் சேர்கிறது .
7 . வெறும் பன்னிரண்டு நிமிடம் :
ஒரு பிளாஸ்டிக் பை அது தூக்கி எறியப்படும் முன்பு சராசரியாக வெறும்
பன்னிரண்டு நிமிடமே உபயோகபடுத்த படுகிறது .அதன் பின்????? வரும் ஆயிரம்
ஆண்டுகளுக்குஇந்த பூமியில் மிதந்து ,பறந்து நீர்நிலைகளை அடைத்து
வெள்ளபெருக்கை உண்டாக்கி அதன் சேவையை செவ்வனே செய்கிறது
இவையெல்லாம் பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டுமான புள்ளிவிபரம் . இன்னும் நாம்
மினரல் வாட்டர் என்று அருந்துகிறோமே அந்த பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ­
இன்னும் நான் வரவே இல்லை அது இன்னும் பெரிய அசுரன் .ஒன்று நரகாசுரன்
இன்னொன்று பாகாசுரன் ….இவைகளை நாம் முழுமையாக தடை செய்து பூமிக்கு
விடுதலை கிடைத்து பூமி தாய் சீராக சுவாசிக்கும் நாளே உண்மையான தீபாவளி
!!!

--
J.PRABU

Wednesday, 22 May 2013

தெரியுமா உங்களுக்கு

*மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
*200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம் ­.
*நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.
*மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
*நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
*நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
*ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
*வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால ­்தான் சுவையை அறிகின்றன.
*மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
*கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண்துளைகள் இருக்கின்றன.
*ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக்காண முடியும்.
*பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக்
கொன்று விடுகின்றன.
*நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
*ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.
*ஒரு பட்டுப்புழுவின் ­ கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.
*ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
*புழுவை இரண்டாகத் துண்டித்துப்போட்டாலும் அது சாகாது.
*சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்த ­ில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.
*நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளைஉடை தான்.
*ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.
*வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.
*ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.
*வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், ­ தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.
*கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.
*கிறிஸ்தவர்களின ­் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார் ­.
*எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.
*"O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.
*பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.
*அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம்
'குல்மார்க்'-ல் ­ உள்ளது.
*நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார் ­.
*குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23
*வரிக்குதிரையின ­் ஆயுட்காலம் 22 வருடங்கள்
*அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்
*செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்
*சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்
*பெருங்கரடியின் ­ ஆயுட்காலம் 20வருடங்கள்
*தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்
*பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
*திமிங்கிலத்தின ­் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்
*கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்
*மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை
*பாலைவனக்கப்பல் ­ என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்
*ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை
*பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
*தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை


--
J.PRABU

Tuesday, 12 March 2013

ஒருவர் உங்களை நாய் என்று திட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம ­் அப்போது
உங்களுக்கு எதற்கு கோவம் வருகிறது என்று என்றாவது சிந்தித்து பார்த்தாது
உண்டா.....
ஆம் அப்படி சிந்தித்து இருந்தால் நாம் எதற்கு கோவ படவே படவே மாட்டோமே
காரணாம் நமது எண்ணம் அவர் நம்மை திட்டியவுடன் நமக்கு நமது எண்ணம் நாயாகவே
மாற்றி கொண்டு விட்டோம் அதனால் தான் கோவம் வருகிறது அப்போது நீ நாயாகவே
பாவித்து கொண்டு உள்ளாய் அதனால் நமக்கு அந்த எண்ணம் வருகிறது நாம் எந்த
பொருளை கொண்டு உணருகிறோமோ அந்தே பொருளாய் மாறுகிறோம் அதுவே நமது எண்ணத்தை
மாற்றும் தன்மை அடைந்து விடுகிறது.
நாம் எதன் பால் மனதை குவிக்கிறோமோ அதன் பால் உணர்ச்சிகள் நம்மில்
ஆட்கொண்டு விடுகிறது அதனால் அதன் மீது நாம்திளைத்து அதை நாம் முழுமையாக
ஆட்கொண்டு விடுகிறோம் அப்போது நம்மை மாயை என்னும் உணர்ச்சிகள் நம்மை
ஆட்கொண்டு நம்மை அந்த உணர்ச்சிகளுக்கு ­ தகுந்தார் போல நம்மை ஆட
வைக்கிறது
உணர்ந்த நீங்கள் உங்களை நாயோடு ஒப்பிட்டாலும் அந்த நாயிலும் நாம்
ஒப்பிட்டாலும் அதிலும் இறைவன் இறக்கிறான் என்ற நிலை அடைந்து கோவம் வராமல்
உங்கள் நிலை மாறும் மனம் நிலையாய் உணரும் உணர்ச்சியில் இருந்து உணர்ந்து
விலகி நிற்கும்.
நீங்கள் உங்கள் எண்ணங்களை சரி செய்தால் அதை ஒருமுகபடுத்தினா ­ல் உங்கள்
நிலை மாறும் இறை நிலை உங்களை வந்தடையும் மனம் ஒடுங்க ஒடுங்க உங்கள்
நிலையில் இறைவன் வந்து ஆட்கொள்வான் என்பது உணர்ந்து உய்த்து
செல்லமுடியும்..


--
J.PRABU

ஆண்

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர் ­கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....
ஆண் என்பவன் யார்?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்த ­லை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி
விடுகிறான், அவன் தன் சாக்லெட்டைதன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில்
நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம்
உருவாக்குகிறான் ­ ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன்
வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான் ­. எனவே அவன் தன் மனைவி மற்றும்
குழந்தைகளுக்காக ­ எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம்
செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும் , தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின்
இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும ்
முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக் ­குள் வைக்க முயற்சிக்கின்றன
ர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக ­ விட்டுக்கொடுத்த ­ுக்
கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக
என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் உணருங்கள்.
அவனுக்கு தேவைப்படும்போது ­ உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து
இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள


--
J.PRABU

சிந்தனைத் தூறல்கள்

முடங்கிக் கிடந்தால்
சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும்
எழுந்து நட எரிமலையும்
வழி கொடுக்கும்.....
எல்லோருடைய வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்
தூரத்திலிருந்து ­ பாத்தால்
ஒளி மட்டும் தெரியும்
அருகில் சென்று பார்த்தால்
உருகிக் கண்ணீர் வடிப்பது புரியும்..
பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கட்டும்!
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கட்டும்!!! ­
பிரிவும், கோபமும்
ஒருவரை மறப்பதற்கு அல்ல,
அவர்களை அதிகமாக
நினைப்பதற்கு!!!
மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது
அந்த மாற்றத்தை
உயர்வானதாக மாற்றுங்கள்
உங்கள் வாழ்க்கையும்
உயர்வானதாக மாறும்!
செடிகளில் பூக்கும்
மலர்களை விட
சில நொடிகளில் பூக்கும்
புன்னகை மிக மிக அழகானது
கறண்ட தொட்டா
ஒரு நிமிசத்தில உயிர் போகும்...
காதலைத் தொட்டா
ஒவ்வொரு நிமிசமும் உயிர் போகும்!!
வாழ்க்கையில் அன்பான
உறவு கிடைப்பது முக்கியமல்ல...
வாழ்க்கை முழுவதும்
அன்பாக இருப்பதே முக்கியம்!
துன்பத்தை நினைத்து
மகிழ்ச்சியை இழக்காதே...
காதலை நினைத்து
வாழ்க்கையை இழக்காதே...
சோதனையை நினைத்து
சாதனையை இழக்காதே...
தோல்வியை நினைத்து
வெற்றியை இழக்காதே..
நண்பன், பகைவன், தூரோகி
இவர்களை சரியாக இனங்காணுங்கள்
இல்லையேல்
வாழும் வாழ்க்கை
பயனற்றுப் போய்விடும்!!!
தவறுகளை ஒப்புக்கொள்ளும் ­­
தைரியமும்
அதை திருத்திக்
கொள்ளவதற்கான பக்குவமும் தான்
வெற்றிக்கான வழி!
-லெனின்
அடிப்பது வன்முறை!
திருப்பி அடிப்பது
வன்முறை அல்ல,
அது தற்காப்பு!!!
யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே...
உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள்
ஒரு போதும் உன்னை
கண்ணீர் சிந்த விடமாட்டார்கள்!
புதிய நண்பர்களைக் கண்டதும்
பழைய நண்பர்களை மறந்து விடாதீர்கள்
புதியவர்கள் வெள்ளி என்றால்
பழையவர்கள் தங்கம்!
நல்ல முடிவுகள்
அனுபவத்திலிருந் ­து பிறக்கின்றன
ஆனால், அனுபவமே
தவறான முடிவிருந்து
பிறக்கின்றது!
- பில் கேட்ஸ்
மறுக்கப்படும் அன்பும்
மறக்கப்படும் அன்பும்
மரணத்தை விடக் கொடுமையானது
#செத்த பிறகு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட நண்பன் வேணும்,ஆனா உயிரோட
இருக்கும் வரை,கண்ணை கலங்க வச்சாலும் சரி,
பிகரு தான் வேணும


--
J.PRABU

Monday, 11 March 2013

பெண்கள்

1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று
விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431
3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820
4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.
5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை
வெற்றிகரமாக வலம் வந்தவர்.
6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை
செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே
துவக்கினார்.
7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.
8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட்.
81/ 4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.
9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல்
சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.
11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.
13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.
14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.
15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.
16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணாசாண்டி.
17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி
18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி
மார்டினா ஹிங்கிஸ்.
19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி
20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி
21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.
22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும ் பெண் சகுந்தலா தேவி.
23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா
24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.
25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி.

--
J.PRABU

நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?

1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள்.
2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக்கவனித்துக் கொண்டிருக்கிறார ­் என்று
நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவ ­ர்களுக்கு அவரவர்
வேலைகள்.உங்களைத ­்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர்
பார்க்காதீர்கள் ­.
4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள்.
5.மற்றவர்களிடமி ­ருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ
இருக்கலாம்.அதனா ­ல் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க
முயற்சி செய்யுங்கள்.
6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண்பன்'
என்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
7.ஏதாவது தவறு செய்து விட்டால்,இன்று மிகப் பிரபலமாக இருக்கும் பலரும்
தவறு செய்தவர்கள்தான் ­ என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
8.உங்களைப் போல பலரும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாகத்தா ­ன்
இருந்திருப்பார் ­கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
9.மற்றவர்களிடம் ­ அதிகமாகப் பழக சந்தர்ப்பம் வரும்போது,தாழ்வ ­ு
மனப்பான்மை கொள்ளாதீர்கள்.

--
J.PRABU

Saturday, 9 March 2013

நாம் சொல்லும் கருத்து ஒவ்வொன்றும் சரிதான் என்பது ஒவ்வொருவரின்
நம்பிக்கை..ஆனா மற்றவரின் பார்வையில் அது தவறாக படலாம் ஏற்று கொள்ள
முடியாததாக இருக்கலாம்.

--
J.PRABU

பயணத்தின்போது தொந்தரவு செய்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

நண்பர்களே.! இதைக் கண்டிப்பாக இரண்டு நிமிடம் ஒதுக்கிப் படிக்கவும்.
குறிப்பாகப் பெண்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
புகார் எண்: 044-25353999
சென்னை மின்சார ரயில்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தொந்தரவுகள்
குறித்து இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (044-25353999)
அரக்கோணம்- கடற்கரை, தாம்பரம்- கடற்கரை, வேளச்சேரி- கடற்கரை ரெயில்
நிலையங்களுக்கு இடையே காலை மற்றும் மாலை வேளையில் இயக்கப்படும் மகளிர்
சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெண் போலீசார் பணியில் நியமிக்கப்படுவா
­ர்கள் என்று ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர் கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி
தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில் 'ரெயில் பயணத்தின்போது பெண்களுக்கு
உரியபாதுகாப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை
என்றால் புகார் செய்ய உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இந்த புகார் மையத்தில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை பெண் போலீசார்
இருப்பார்கள். அதற்குப்பிறகு கட்டுப்பாட்டு அறை போலீசார் பணியில்
ஈடுபடுவார்கள். 044-25353999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயணத்தின்போது
தொந்தரவு செய்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்' என்று
கூறியுள்ளார்.

--
J.PRABU

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ?

நீங்க இதுக்கும் சிரிக்கலேன்னா நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது ,,,
இப்படிதான் விவாகரத்து நடக்குதோ?
நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய ஒரு தகவல் ? படிச்சுப் பாருங்க கண்டிப்பா
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க.
கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்
பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு
இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை
ஆரம்பமாயிற்று.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
"அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?"
"அடுப்படியில பிரச்சினை எதுவும்இல்லைங்க"
"ப்ச்.. உங்களுக்கிடையில ­் என்ன தகராறு?"
"எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?"
"அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது"
"தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்"
"கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?"
"அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க"
"வீட்டுக்காரரோட ­ என்ன சண்டை?"
"வீட்டுக்காரரோட ­ எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை
வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு"
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
"எதுக்காக விவாகரத்து கேட்கிறார்" என்று அலறி விட்டு இருமினார்.
"ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க
நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா
வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?"

--
J.PRABU

தத்துவம்

சிரிக்க.....மட் ­டும்........... ­....
தத்துவம் 1
"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."
தத்துவம் 2
"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..
கல்யாணம் பண்ணினவன் எல்லாம்
பொண்டாட்டியத்தா ­ன் காதலிப்பான்னு
சொல்ல முடியாது..."
தத்துவம் 3
"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதல்டா...."
தத்துவம் 4
"பொண்டாட்டிய மட்டும் காதலிக்கணும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கிற எல்லாரையும் பொண்டாட்டியா
நெனைக்கறது ஆம்பளை புத்தி..."
தத்துவம் 5
"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிர்ஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."
தத்துவம் 6
"ஏன்னா அவ அழகுன்னு சொல்லுறவன் லோக்கல் லவ்வர்..
ஏன்னா அவ என் காதலின்னு சொல்லுறவன் True லவ்வர்..."
தத்துவம் 7
"காதலிய பொண்டாட்டி ஆக்க
முடியலைனா பொண்டாட்டிய
காதலி ஆக்கிக்குங்க... ­."
தத்துவம் 8
"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா
காதல் கல்யாணத்துலதான் ­ முடியனும்னு இல்லை..."
தத்துவம் 9
"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவன
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை

--
J.PRABU

மிஸ்டு கால் வருதா..? ஜாக்கிரதை...!

+92, #90 இப்படி துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வருதா..?
ஜாக்கிரதை...!
உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும்
நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று
வாடிக்கையாளர்கள ­் கேட்டுக் கொள்ளப்படுகிறார ­்கள்.
சிம் கார்டை குளோன் செய்து அதில்உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய
யுத்தியை கையாளுகின்றனர். ­ +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும்
நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது ­ விஷமிகள் மிஸ்ட் கால்
கொடுக்கிறார்கள் ­. யாரோ அழைத்துள்ளார்கள ­ே என்று நினைத்து அந்த நபரும்
அந்த எண்ணைதிருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம்,
மெமரிமற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள்
எடுத்துவிடுகின் ­றனர்.
அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து
பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன்
சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது #
90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள்.
அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம்கார்டை குளோன் செய்து நாம்
அதில்வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.
அதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க
வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை
பதிவுசெய்து வைக்க வேண்டாம்

--
J.PRABU

Tuesday, 5 March 2013

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..? ! கண்டுபிடிப்பது எப்படி..?!

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..? ! கண்டுபிடிப்பது எப்படி..?!
நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள்
அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது
கட்டாயமாகும்.
சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல்
செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?
உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான
நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு
வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த
வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.
இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள்
உங்களுக்கு உதவும்.
முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய
International Mobile EquipmentIdentification எனப்படும் IMEI எண்ணை
அறிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள்
மொபைலில்*#060# என தட்டச்சிடுங்கள் ...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI
எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங ்கள்.
அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS
செய்துவிடுங்கள் .
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும்.
அப்படி வரவில்லையென்றால ் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள்
அறிந்துகொள்ளலாம ்.
இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும்
நீங்கள் உறுதிப்படுத்திக ்கொள்ள முடியும்.
http:// www.numberingpla ns.com/ ?page=analysis&s ub=imeinr
என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக ்கொண்ட IMEI
எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல்
தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.
குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.
உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரி ய நாடுகளையும், தரத்தையும் இந்தIMEI
எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.
அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7,8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள்
செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.
2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும்,
தரமானதாகவும் இருக்கும்.
3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும்
தரமிக்கதாகவும் இருக்கும்.
4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம்
குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.

--
J.PRABU

Thursday, 28 February 2013

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள ்வது ??

மாரடைப்பை தவிர்க்க..
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி
காப்பாற்றிக்கொள ்வது ??
மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு
தனியாக சென்று கொண்டிருக்கிறீர ்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக
உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று
உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக
வைத்துக்கொள்வோம ், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க
முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை
நாமே காக்க என்ன செய்யலாம்??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக
தனியாக இருந்திருப்பவரா க உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீ ங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10
நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக
ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் ,
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும்
வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு
இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி
வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக
துடித்துக்கொண்ட ே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

Monday, 25 February 2013

உங்களுக்கு தெரியுமா..?

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர்வராது..
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..
புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)
சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.
8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.
திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.
சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும்
மீண்டும் கட்டப்படும்.
பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது,
இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை
அமைதி படுத்த அனுப்புகிறது.
லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால்
வரையவும் செய்வார்.
15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable
குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6
வயதில் தான் வளர்கிறது.
எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.
வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.
சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.
கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

--
J.PRABU

MUST SHARE IT

இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும்
ஒரு அறிவிப்பு... {PLEASE SHARE THIS...}
MUST SHARE IT...!!!
சாலை விபத்தில் யாரேனும்
உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,
தங்களின் பார்வையில் பட்டால்,
உடன் அவர்களை அருகில் உள்ள
மருத்துவ மனையில் சேர்த்து,
விபத்தில் சிக்கியவரை காப்பாற்றவேண்டியது
நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.
இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக
முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது
என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளத ­ு....
முதலுதவி அளித்த பிறகு
காவல்துறைக்கு தகவல் தெரிவித்துகொள்ளலாம்...
தயவு செய்து இந்த செய்தியை
தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....
அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...
ஏன்...
நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்.....
Attention all Indian Friends……
Supreme Court has announced, any person who meet...s road accidents
can be taken to the nearby hospital immediately. Hospital must not ask
for police report to admit him,its doctors' duty to do First-aid.
Police can be informed later. Pls spread this message by sharing on
your wall .. It will help us all...!

--
J.PRABU

அறிவியல்

1. பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.
2. உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்தது. இதில்
சுமார் 8 லட்சம் மக்கள்இறந்தனர்.
3.சூரியனிலிருந் ­து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள்
எடுக்கின்றது.
4.சராசரியாக ஒரு மனிதன் ஐந்து முறை சிரிக்கின்றான்.
5.ஆல்பிரட் நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப் படுகின்றன)
1866ஆம் ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்தார் ­.
6.எபோலா என்னும் வைரஸ் தாக்கினால், ஐந்தில் நான்கு மனிதர்கள் இறந்துவிடுவார்க ­ள்.
7.2010க்குள் கால்வாசி செடி இனங்கள் அழியும் அபாயம் உள்ளது.
8.உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி,ஈயின் கண்ணைவிட சிறியது.
9.மிக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18 மைல் கள்.
10.பிற‌க்கும் 2000 குழ‌ந்தைக‌ளில் ஒரு குழ‌ந்தை ப‌ற்க‌ளுட‌ன் பிற‌க் கின்ற‌ன‌.
11.சில‌ வகை ச‌வுக்கு ம‌ர‌ங்க‌ள்ஒரு நாளைக்கு 3 அடி வ‌ள‌ர்கின்ற‌ன.
12.ச‌ராச‌ரியாக‌ ­ ஒரு ம‌னித‌ன் 4850 வார்த்தைக‌ளை 24 ம‌ணி நேர‌த் தில்
ப‌ய‌ன்ப‌டுத்துக ­ின்றான்.
13.லியானார்டோ டார்வின்சி ஒரு கையில் எழுதிக்கொண்டே ம‌று கையில்
வ‌ரையுவும் செய்வார்.
14. க‌ண்க‌ளை திற‌ந்துவைத்து தும்முவ‌து சாத்திய‌மில்லை
15. நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும ­் toothbrushக‌ளை க‌ழிவ‌றையில் இருந்து
குறைந்த‌து ஆறு அடி த‌ள்ளி வைக்க‌ வேண்டுமென‌ ப‌ல் ம‌ருத்துவ‌ர் க‌ள்
ப‌ரிந்துரைக்கின ­்றார்க‌ள்.
16.க‌ர‌ப்பான்பூ ­ச்சி த‌லையின்றி ப‌த்து நாள் வ‌ரை உயிர் வாழும்
17.விர‌ல்க‌ளில் ­ ந‌க‌ங்க‌ள் வ‌ள‌ர்வ‌து இய‌ற்கை. அதில் ஆட்காட்டி விர‌
லில் மிக‌ நிதான‌மாக‌வும், ­ ந‌டுவிர‌லில் மிக‌ வேக‌மாக‌வும் வ‌ள‌ரு
மாம்.
18. நான்கு வய‌து குழ‌ந்தை நாளைக்கு நானூறு கேள்விக‌ள் கேட் கின்ற‌தாம்.
19. ஒவ்வொருவ‌ரின் கை ரேகையும் த‌னித்துவ‌மான‌த ­ு. அதே போல‌ தான் நா ரேகையும்
20. ப‌ன்றிக‌ள் தானாக‌ வான‌த்தை பார்ப்ப‌து சாத்திய‌மே இல்லை
21. கெட்டுப்போகாத‌ உண‌வுப்பொருள் ‍ தேன்
22. ந‌த்தை தொட‌ர்ந்து மூன்று வ‌ருட‌ங்க‌ள் தூங்க‌லாம்.
23. ப‌ட்டாம்பூச்சிக ­‌ள் த‌ங்க‌ள் பாத‌ங்க‌ளினால் சுவைக்கின்ற‌ன‌.
24. கிளியும் முய‌லும் த‌ங்க‌ள் பின்னால் இருப்ப‌தை த‌லை திருப்பா ம‌ல்
காண‌முடியும்.
25. நீர் யானை ம‌னித‌னை விட‌ மிக‌ப்பெரிய‌து, ­ ஆனால் அது ம‌னித‌ னை விட‌
வேக‌மாக‌ ஓடும்.
26. க‌ண் இமைக‌ளில் ம‌னித‌னுக்கு550 முடி இருக்கின்ற‌து.
27. அண்டார்டிகா க‌ண்ட‌த்தில் ம‌ட்டும் நிலங்கள் க‌ட‌ல் ம‌ட்ட‌த்திற்கு
கீழே எங்கும் இல்லை.எல்லா இட‌மும் க‌ட‌ல் ம‌ட்ட‌த்திற்கு மேல் தான்
உள்ள‌து.
28. வாத்தின் குவாக் குவாக் ச‌த்த‌த்தை கேட்டிருக்கின்ற ­ீர்க‌ள் அல்ல‌
வா? அத‌ன் ஒலி ம‌ட்டும் எதிரொலிப்ப‌தே இல்லை. இதுவ‌ரை ஏன் என் று
தெரிய‌வில்லை.
29. டைப் ரைட்ட‌ரில் முத‌ன் முத‌லாக‌ த‌ட்ட‌ச்ச‌ப்ப‌ட ­்ட‌ நாவ‌ல் ‍ டாம்சா ய‌ர்
30. த‌ங்க‌ மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மை யாக‌ மாறிவிடுமாம்.
31. ப‌னிக்க‌ர‌டிக‌ள ­் ஒரே அம‌ர்வில் 86 பென்குயின்க‌ளை விழுங்கு மாம்.
32. டான்பின்க‌ள் ஒரு க‌ண்னை திற‌ந்து வைத்த‌ப‌டியே உற‌ங்குகின் ற‌ன‌.
33. மாடுக‌ளை மாடிப்ப‌டிக‌ள் ஏற‌வைக்க‌லாம், இற‌ங்க‌ வைக்க‌ முடி யாது.
34. ம‌னித‌னின் மூக்கும் காதும் வ‌ள‌ர்ந்துகொண்ட ­ே போகும், ஆனா ல்
க‌ண்க‌ள் வ‌ள‌ராது.
35. வ‌யிறு நிறைய‌ உண்ட‌ பிற‌கு, ச‌ற்று நேர‌ம் கேட்கும‌ திற‌ன் குறை யுமாம்

--
J.PRABU

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்க ­­ளால் பயன்படுத்தப்படு ­வது
USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை.
வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாகபென்டிரைவில்
புகுந்து உள்ளே இருக்கும்பைல்கள ­­ை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள்பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவி
­­டும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.
வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள்
இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து
வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில்
Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான
தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு
வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து
உபயோகிக்க வேண்டியதில்லை.உ ­­ங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம்.
கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer
செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்துகொள்வோம் அதற்கு
நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s / ­d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும
­­் Space சரியாககொடுக்கவு ­ம்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர் ­­கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள் ­. இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து
பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்

--
J.PRABU

பெட்ரோல் & டீசல் சேமிக்க சில‌ வழிமுறைகள்

1. வாகனங்களின் டயர்களில் சரியானகாற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும்
அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால்
மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும். நிறுவனத்தார் கொடுத்த
காற்றழு த்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.
2. புதிய டயர்கள் மாற்றும்பொழுதுவாகன தயாரிப்பாளர் பரிந்து ரைத்த டயர்களை
மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. காலை நேரங்களில் மட்டும் எரிபொருளினை நிரப்ப முயற்சியு ங்கள்.
எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி(spec ific gravity) காலை நேரங்களில்
அதிகமாக இருக்கும்.
4. எரிபொருள் கலனில் எப்பொழுதும்அறை பங்கிற்க்குமேல் எரிபொருள்
இருக்கும்படி பார்த் துக்கொள்ளுங்கள் . இதனால் எரிபொருள் சரியான
அழுத்ததில் செல்ல பெரிதும் உதவும்.
5. வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான காலஇடைவெளியில்
பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர் க்கலாம்.வாகனத்தின் செயல்திறனும்
சிறப் பாக இருக்கும்.
6.எக்காரணம்கொண் டு தயாரிப்பாளர்பரிந்து ரைக்காத எரிபொருள், அடிட்டீவஸ்
பயன் படுத்தாதீர்கள்.
7. வாகனத்தை இயக்கும் பொழுது தேவையான அளவே அக்ஸி லேட்ர்களை கொடுங்கள்.
திடீரென அதிகப்படியான அக்ஸிலேட்ர் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல் லது.
பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள் அக்ஸிலேட்டர்கொடு த்தவுடன்
உடனடியாக பிரேக் கொடுக் காதீர். சிக்னல்களில் திடீரென வேகம்
எடுக்காதீர்கள். சீரான வேகத்திலே வாகனத்தை இயக்குங்கள்.
8. அதிவேகம் மிகுந்த ஆபத்தானவை அதேபோல எரிபொருளும் அதிகம் தேவைப்படும்.
டாப் க்யரிலும் மெதுவாக செல்வது எரி பொருளை சேமிக்க உதவும்.சராசரியா க
50-60 கீமி வேகத்தில் பயணிக்க முயலுங்கள்.
9. 2 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தால் வாகன
த்தை அனைத்து விடுங்கள்.
10. க்ளட்ச் மீது க்யர் மாற்றும்பொழுது மட்டுமே காலினை பயன் படுத்தவும்.
11. தொடர்ந்து நிலையான வேகத்தை பயன்படுத்துங்கள ்.

--
J.PRABU

பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல்,கிட்டத்தட்ட
அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(p endrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போ து
சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக
இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம்
எடுத்துக்கொள்ளு ம். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?
உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.
2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத்
தேர்ந்தெடுக்கவு ம்.
3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக்
செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும ்.
4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.
6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக்
செய்து அதன் கீழிருக்கும் Better Performanceஎன்பதைத் தேர்ந்தெடுத்து OK
கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை
நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை
கருத்துரையில் சொல்லுங்கள்.
மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது
Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை
கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங
்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!


--
J.PRABU

Wednesday, 20 February 2013

ஈபிள் கோபுரம்


                   *ஈபிள் கோபுரம் - சில முக்கியத் தகவல்கள்.*



பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி
திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி
நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. 1887
இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர்.
ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம்
தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்கள்கள்.

   -

   கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர்
   (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

  கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts)
கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின்
எடை 7,300 டன்களாகவும் உள்ளது.

இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம்
தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும்
பயன்படுத்தப்படவில்லை.

வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை
ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள
மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (
Elevator) வசதியும் உள்ளது .

இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும்
பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு
தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும்
பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி
நிலையமும் இயங்குகின்றது.

இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரி
கின்றது.

பிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு
முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.

கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது
அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி
மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ஆம் வருடம் வரைசுமார் 40
வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது.

இக்கோபுரம இதுவரை 243 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப் பட்டுள்ளது.



--
J.PRABU

Monday, 11 February 2013

பத்மா ஸ்ரீ கமலகாசன்

எனது மதம் மட்டுமே சிறந்தது அதுமட்டுமே எனக்கு வேண்டும் எனச் சொல்லும்
ஒரு இந்துவோ அல்லது இஸ்லாமியரோ அல்லது மற்ற மதத்தவரோ, ஆபத்து என்றவுடன்
ரத்த வங்கிகளில் ஏனய்யா O நெகடிவ் கொடுங்க B பாசிட்டிவ் கொடுங்கனு
கேக்குறிங்க ? ஒரு யூனிட் இந்து ரத்தம் கொடு இல்ல இரண்டு யூனிட் முஸ்லிம்
ரத்தம் கொடுன்னு கேக்க வேண்டியதானே.? அந்த நொடியில் மதத்தை மறக்கும்
நீங்கள் ஏன் மற்ற நேரங்களில் இருக்கிப் பிடித்துக்கொள்கிறீர்கள் ? -பத்மா
ஸ்ரீ கமலகாசன்


--
J.PRABU

MEDICINES ORIGINAL OR DUPLICATE

DO U KNOW Ur MEDICINES ORIGINAL OR DUPLICATE...? IF YOU WANT TO KNOW
THAT THE DRUG WHICH YOU BROUGHT FROM THE STORE ARE ORIGINAL OR
DUPLICATE IS JUST BY EASY 3 STEPS.... BY DR.TRILOK RAVAL BEHIND THE
EACH MEDICINE THEREIS ONE NUMBER WHICH IS THE UNIQUE ID NUMBER... JUST
MSG THAT NUMBER TO 9901099010 AFTER 10 SEC. YOU WILL GET ONE RESPONSE
MSG.... IF THE MEDICINE IS ORIGINAL THEN YOU WILL GET THE REPLY WITH
THE PROPER BATCH NUMBER AND THE NAME OFTHE PHARMA COMPANY.... WHICH
YOU CAN CROSS CHECK WITH YOURSTRIPS OR ANY MEDICINE WHICH YOU
BROUGHT.... AND IF THE NUMBER IS NOT MATCHING THEN YOU JUST HAVE TO
RESEND THE SAME MSG SO THE COMPLAINT WILL BE REGISTERED.... PLZ SHARE
TO ALL...!


--
J.PRABU

விதியையும் மாற்றி அமைக்கலாம்

ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார்
செய்து, போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி
பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோபெரும்
சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு
தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து,
கேட்கச் சென்றார். அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார்.
அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும்
வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனைசெய்து, ஒரு
நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி
விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில்
தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை
விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும்
அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள்
நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும்
எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி
"விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று
ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை"
காண்பித்தார். நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும்
எளிதில்வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்...!


--
J.PRABU

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு
பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து
பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம்
கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக
தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும்
சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer
Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும்
பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில்
வந்தாலும்நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த
Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். தவறுதலாக
எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு
Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி
நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல்
செய்யப்படும். நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate
செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போதுஇதை கொண்டு
வந்துவிட்டன. உங்கள்நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து
பாருங்கள்...! அழைக்க வேண்டிய எண் - 155223


--
J.PRABU

சில அரிய சுவையான தகவல்கள்

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர்"புளியோதரை"தான்
பிரசாதம்,லட்டு கிடையாது.
2.ஆப்கானிஸ்தானி ல் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்ப ட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரேபெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள்26 ஆகும்.
10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞ ர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய
சுவையான தகவல்கள்.
1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.
2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.
3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோம ரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.
4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.
5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.
6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி
பேசவல்லவராக இருக்கவில்லையாம ், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி
குன்றியவராக கருதினார்கள்.
7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க
முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட் டார்.

--
J.PRABU

காந்தி

தீவிரவாதம் தன்னுடைய முகத்தை மத நம்பிக்கையால் மூடிவைத்து இருக்கிறது. மத
நம்பிக்கையின் பின்னணியில் அதே மதத்தைச் சேர்ந்த மக்கள், அப்பாவித்தனமாக
ஒன்று சேருகின்றனர். அரசாங்கத்தின் இரும்புக்கரம் அழுத்தமாகப் பதிவதற்கு
இதுவே தடையாக இருக்கிறது.
ஏதோ ஒரு சிலர் செய்யும் பயங்கரவாதக் காரியங்களுக்காக ஒட்டுமொத்த சமூகமும்
பழியைச் சுமக்க வேண்டியுள்ளது. மேலும், அந்தச் சமூக மக்களும் மத
உணர்வுகளையும் தீவிரவாதக் காரியங்களையும் இனம் பிரித்து அடையாளம் காணப்
பழகிக்கொள்ள வேண்டும்.
'ஒரு பாகிஸ்தானியன் இறந்து இந்தியா வாழ வேண்டுமானால், அப்படிப்பட்ட
இந்தியா எனக்குத் தேவை இல்லை. ஓர் இந்து இறந்தால்தான் பாகிஸ்தான்
வாழும்என்றால், அப்படிப்பட்ட பாகிஸ்தான் அவசியம் இல்லை' என்றுதன்னுடைய
மரணத்துக்கு முன்னால் கம்பீரமாகச் சொன்னவர் காந்தி.
இந்த எண்ணத்தை அனைத்து மக்களும் மனதில் கொண்டால்தான் தீவிரவாதத்தை ஒடுக்க
முடியும்...!

--
J.PRABU