Tuesday 12 March 2013

சிந்தனைத் தூறல்கள்

முடங்கிக் கிடந்தால்
சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும்
எழுந்து நட எரிமலையும்
வழி கொடுக்கும்.....
எல்லோருடைய வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்
தூரத்திலிருந்து ­ பாத்தால்
ஒளி மட்டும் தெரியும்
அருகில் சென்று பார்த்தால்
உருகிக் கண்ணீர் வடிப்பது புரியும்..
பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கட்டும்!
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கட்டும்!!! ­
பிரிவும், கோபமும்
ஒருவரை மறப்பதற்கு அல்ல,
அவர்களை அதிகமாக
நினைப்பதற்கு!!!
மாற்றம் ஒன்றே மாறாதிருப்பது
அந்த மாற்றத்தை
உயர்வானதாக மாற்றுங்கள்
உங்கள் வாழ்க்கையும்
உயர்வானதாக மாறும்!
செடிகளில் பூக்கும்
மலர்களை விட
சில நொடிகளில் பூக்கும்
புன்னகை மிக மிக அழகானது
கறண்ட தொட்டா
ஒரு நிமிசத்தில உயிர் போகும்...
காதலைத் தொட்டா
ஒவ்வொரு நிமிசமும் உயிர் போகும்!!
வாழ்க்கையில் அன்பான
உறவு கிடைப்பது முக்கியமல்ல...
வாழ்க்கை முழுவதும்
அன்பாக இருப்பதே முக்கியம்!
துன்பத்தை நினைத்து
மகிழ்ச்சியை இழக்காதே...
காதலை நினைத்து
வாழ்க்கையை இழக்காதே...
சோதனையை நினைத்து
சாதனையை இழக்காதே...
தோல்வியை நினைத்து
வெற்றியை இழக்காதே..
நண்பன், பகைவன், தூரோகி
இவர்களை சரியாக இனங்காணுங்கள்
இல்லையேல்
வாழும் வாழ்க்கை
பயனற்றுப் போய்விடும்!!!
தவறுகளை ஒப்புக்கொள்ளும் ­­
தைரியமும்
அதை திருத்திக்
கொள்ளவதற்கான பக்குவமும் தான்
வெற்றிக்கான வழி!
-லெனின்
அடிப்பது வன்முறை!
திருப்பி அடிப்பது
வன்முறை அல்ல,
அது தற்காப்பு!!!
யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே...
உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள்
ஒரு போதும் உன்னை
கண்ணீர் சிந்த விடமாட்டார்கள்!
புதிய நண்பர்களைக் கண்டதும்
பழைய நண்பர்களை மறந்து விடாதீர்கள்
புதியவர்கள் வெள்ளி என்றால்
பழையவர்கள் தங்கம்!
நல்ல முடிவுகள்
அனுபவத்திலிருந் ­து பிறக்கின்றன
ஆனால், அனுபவமே
தவறான முடிவிருந்து
பிறக்கின்றது!
- பில் கேட்ஸ்
மறுக்கப்படும் அன்பும்
மறக்கப்படும் அன்பும்
மரணத்தை விடக் கொடுமையானது
#செத்த பிறகு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட நண்பன் வேணும்,ஆனா உயிரோட
இருக்கும் வரை,கண்ணை கலங்க வச்சாலும் சரி,
பிகரு தான் வேணும


--
J.PRABU

No comments: