பிளாஸ்டிக் பையை ஏன் தவிர்க்க வேண்டும் ?
ஏழு காரணங்கள் :
1 . அழியும் இயற்க்கை வளம்:
பிளாஸ்டிக் என்பது பாலி எத்திலீன் .இது இயற்கை வாயு மற்றும்
பெட்ரோலியத்தில் இருந்து தயாரிக்க படுவது . அமெரிக்கர்கள் ஒரு
வருடத்துக்குஉபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளை செய்ய 1 .2 கோடி பேரல்
எண்ணெய் தேவைபடுகிறது .அப்படியென்றால் உலகம் முழுக்க ????
2 .சுற்றுபுறம் மாசடைதல் :
ஒரு பிளாஸ்டிக் பை நிலத்தில் அழிய ஆயிரம் வருடமும் நீரில் அழிய 450
வருடமும் தேவைபடுகிறது. அவ்வளவு வருடமும் அது என்ன செய்கிறது …. நிலத்தை
அடைத்து கொண்டு ….????
3 . ஒரு சதவிதத்துக்கும் குறைவானஅளவே மறு சுழற்சி செய்யபடுகிறது:
ஆண்டொன்றிற்கு ஒரு மனிதன் 350 -400 பிளாஸ்டிக் பைகளை உபயோகபடுத்துகிற
ான் . இவையெல்லாம் எங்கே செல்கின்றன என்று யோசித்தீர்களா ?
4 .உயிரினங்களுக்க ு ஆபத்து :
மிருகங்களும் கடல் வாழ் உயிரினங்களும் தெரியாமல் பிளாஸ்டிக் பையை உண்டு
இறந்து இருக்கின்றன ! கடல் ஆமைகள் பிளாஸ்டிக் பைகளை jelly fish என்று
நினைத்து உண்டு இறக்கின்றன.உயிரினங்களின் செரிமான குழாயில் இருந்து
கொண்டு செரிமானமாகமாகாத தால் அவை இறக்கின்றன !
5 .குழந்தைகள் பாதுகாப்பு :
US consumer product safety commision ஆண்டொன்றுக்கு 25 குழந்தைகள்
பிளாஸ்டிக்கை முகர்ந்து மூச்சு விட முடியாமல் இறப்பதாக தெரிவிக்கின்றது
! இதில் பெரும்பான்மை 12 மாதத்துக்கும் குறைவான குழந்தைகள் !
6 .நம் உணவில் கலக்கும் பிளாஸ்டிக் :
பத்து லட்சம் டன் = ஒரு வருடத்தில் தயாராகி தூக்கி எறியப்படும்
பிளாஸ்டிக் பைகளின்அளவு !
ஆடு ,மாடு , கோழி ,மீன் ஆகிய உயிரினங்கள் எதிர்பாராவிதமாக ப்ளாஸ்டிக்கை
உண்பதால் மரணிக்கும் வாயிப்பு ஏற்படும் போது அவற்றை உண்ணும் மனிதனின்
உடலிலும் பிளாஸ்டிக் சேர்கிறது .
7 . வெறும் பன்னிரண்டு நிமிடம் :
ஒரு பிளாஸ்டிக் பை அது தூக்கி எறியப்படும் முன்பு சராசரியாக வெறும்
பன்னிரண்டு நிமிடமே உபயோகபடுத்த படுகிறது .அதன் பின்????? வரும் ஆயிரம்
ஆண்டுகளுக்குஇந்த பூமியில் மிதந்து ,பறந்து நீர்நிலைகளை அடைத்து
வெள்ளபெருக்கை உண்டாக்கி அதன் சேவையை செவ்வனே செய்கிறது
இவையெல்லாம் பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டுமான புள்ளிவிபரம் . இன்னும் நாம்
மினரல் வாட்டர் என்று அருந்துகிறோமே அந்த பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு
இன்னும் நான் வரவே இல்லை அது இன்னும் பெரிய அசுரன் .ஒன்று நரகாசுரன்
இன்னொன்று பாகாசுரன் ….இவைகளை நாம் முழுமையாக தடை செய்து பூமிக்கு
விடுதலை கிடைத்து பூமி தாய் சீராக சுவாசிக்கும் நாளே உண்மையான தீபாவளி
!!!
--
J.PRABU
No comments:
Post a Comment