Monday 11 February 2013

காந்தி

தீவிரவாதம் தன்னுடைய முகத்தை மத நம்பிக்கையால் மூடிவைத்து இருக்கிறது. மத
நம்பிக்கையின் பின்னணியில் அதே மதத்தைச் சேர்ந்த மக்கள், அப்பாவித்தனமாக
ஒன்று சேருகின்றனர். அரசாங்கத்தின் இரும்புக்கரம் அழுத்தமாகப் பதிவதற்கு
இதுவே தடையாக இருக்கிறது.
ஏதோ ஒரு சிலர் செய்யும் பயங்கரவாதக் காரியங்களுக்காக ஒட்டுமொத்த சமூகமும்
பழியைச் சுமக்க வேண்டியுள்ளது. மேலும், அந்தச் சமூக மக்களும் மத
உணர்வுகளையும் தீவிரவாதக் காரியங்களையும் இனம் பிரித்து அடையாளம் காணப்
பழகிக்கொள்ள வேண்டும்.
'ஒரு பாகிஸ்தானியன் இறந்து இந்தியா வாழ வேண்டுமானால், அப்படிப்பட்ட
இந்தியா எனக்குத் தேவை இல்லை. ஓர் இந்து இறந்தால்தான் பாகிஸ்தான்
வாழும்என்றால், அப்படிப்பட்ட பாகிஸ்தான் அவசியம் இல்லை' என்றுதன்னுடைய
மரணத்துக்கு முன்னால் கம்பீரமாகச் சொன்னவர் காந்தி.
இந்த எண்ணத்தை அனைத்து மக்களும் மனதில் கொண்டால்தான் தீவிரவாதத்தை ஒடுக்க
முடியும்...!

--
J.PRABU

No comments: