Wednesday, 20 April 2016

அறிந்து கொள்வோம்



1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
*
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
*
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
*
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
*
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
*
6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
*
7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
*
8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
*
9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
*
10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
*
11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
*
12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
*
13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
*
14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
*
15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
*
16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
*
17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
*
18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
*
19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
*
20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
*
21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
*
22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
*
23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
*
24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
*
25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
*
26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
*
27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
*
28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
*
29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
*
30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
*
31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
*
32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
*
33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
*
34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
*
35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
*
36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
*
37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
*
38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
*
39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
*
40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
*
41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
*
42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
*
43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
*
44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
*
45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
*
46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
*
47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
*
48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
*
49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
*
50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.

Follow on Facebook

நன்பர்களே ஒரு நிமிடம் இதனை படித்துவிட்டு பகிருங்கள்



ஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.

அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தார்.
அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது. என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை. இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார். பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார். "உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது. உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது. அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது. உடனடியாக அதனை கொல்லுங்கள்....!" என்பதே அது.
நீதி: உங்களை சுற்றியுள்ள அனைவரும், உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து. உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.
எதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்....!!!

Follow on Facebook

கார், பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.


நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள்.
*************************************

சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று

விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......

முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......

கடந்துச் செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா நீ தான்
எங்கள் கண்மணி என்று.,.....

விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......

ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து
அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்

காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டியத்தாலி நினைவிருக்கிறதா
கண்ணாளா
காத்திருப்பேன் கடைசிவரை

விரல் பிடித்து
 நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட உன் நிழல் நான் தந்தையே
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..

அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்

உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம்
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று......

அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனுமென வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கையொரு
வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்

தொங்கிச் செல்வதும்
துரத்திச்
செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்
ஆனால், மரணமிடருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது

விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளையெல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில்  பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,........

அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்

மித வேகம் மிக நன்று...
Follow on Facebook

Monday, 18 April 2016





சிந்தனை செய்வதற்க்கு
🔰தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.
🔰திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லைஎன்றால் அந்த சிங்கம் திண்றுவிடும்" என பதறுகிறாள்
🔰அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாது" என்று கூறினார்.
🔰மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் நமக்கு என்ன செய்யும்"
🔰தந்தையிடம் பதில் இல்லை..........
🔰யாரிடமும் பதில் இல்லை
📓அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா?
📓அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா?
📓அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா?
📓அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா?
📓பேசு என்றால் அது பேசுமா?
📓அழு என்றால் அழுதிடுமா?
📓ஓடிவா என்றால் ஓடி வருமா?
📓பேசினால் கேட்குமா?
📓உணவு ஊட்டினால் உண்ணுமா?
📓இப்படி நம் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஒரு கல் எப்படி கடவுளாகும்
📓இவை எதையும் செய்யாத ஒரு கல் எப்படி கடவுளாகும்.
💠நன்றி: 🎥நியூஸ் மீடியா

 🎥




தயவு செய்து: ஒரு இரண்டு நிமிடம் படியுங்கள் நண்பர்களே
விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .
இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் . பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் . பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர். பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை திட்டிதீர்த்தனர். விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன் கேட்டனர்.
அப்போது திடீரென அந்த பணக்காரர் சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா , உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார் . என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார் பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் , கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே,
லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் . பழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த அவர் ஆழமாக மனதில் பதியவைத்துவிட்டார்.

Sunday, 17 April 2016

King Raja Raja Chola ( அன்பே சிவம் )

The purported grave of King Raja Raja Chola in the village of Udayalur near Kumbakonam, India



🐅உலகில் மகிழ்ச்சி தரக்கூடியது எது?

🐅தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது

🐅உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி.    “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள்,

🐅யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள்.

🐅மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார்.

🐅முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?” அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” என அதை நிராகரித்தார் மன்னர்.

🐅அடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார்.

🐅அடுத்து, அழகான மலர்கள் இருந்தன. “இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?. அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது”
🐅அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது. “நோயாளிகளுக்கு  எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?” என்று கூறி அதனையும் நிராகரித்த மன்னர் இராஜராஜ சோழர்,

🐅அடுத்தாக ஒரு பெரிய சிவலிங்கத்தின் அருகில் வந்தார். அந்த சிவலிங்கத்தின் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிற்பத்தின் கீழே “அன்பே சிவம்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார்

🐅மன்னர். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார். “நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.” என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.

🐅“அரசே நான் ஒரு சிற்பி, இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான். சிவலிங்கத்தின் கீழே ஒரு பெண்மணி அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள்.

🐅இந்த உலகில் அன்பை மட்டும்தான், கண் தெரியாதவர்ளும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும் அன்பைதான் எதிர்பார்க்கிறார்கள். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது.

🐅அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும். அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும்  அன்பு. அன்புதான் இறைவன்.

🐅அதனால்தான் சிவலிங்கத்தின் கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து, ”அன்பே சிவம்” என்று எழுதி வைத்தேன்.” என விளக்கினார் சிற்பி.

🐅இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார். “உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற  என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம்.

🐅நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள்.” என்று கூறி ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து, ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர்.

🐅அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?. அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது.

🐅அன்பே சிவம்.!

(வாழ்க்கை வாழ்வதற்கே)

Saturday, 9 April 2016

Wednesday, 6 April 2016



ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான்.
அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை  என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான், அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.
சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.
சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும்

Follow the story in FB

Amazing story of four candles



ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்😇😇😇
இந்த கதையை.}

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு
 இருந்தன. மெலிதாய் காற்று வீசிக்கொண்டு
 இருந்தது..!!

காற்றை கண்டதும்...

'அமைதி‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்து
 விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாது’ என்று அணைந்துவிட்டது.

'அறிவு‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்
 காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று
 வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.

அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே'
என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி
 சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.

சிறுவன் உடனே..

நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..

'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
 இழக்கக் கூடாது.

story in video

J.Prabu follow in FB

Tuesday, 5 April 2016

சிந்தனை செய்வதற்க்கு



🔮சிந்தனை செய்வதற்க்கு

🔰தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.

🔰திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லைஎன்றால் அந்த சிங்கம் திண்றுவிடும்" என பதறுகிறாள்

🔰அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும்  செய்யாது" என்று கூறினார்.

🔰மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் நமக்கு என்ன செய்யும்"

🔰தந்தையிடம் பதில் இல்லை..........

🔰யாரிடமும் பதில் இல்லை

📓அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா?

📓அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா?

📓அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா?

📓அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா?

📓பேசு என்றால் அது பேசுமா?

📓அழு என்றால் அழுதிடுமா?

📓ஓடிவா என்றால் ஓடி வருமா?

📓பேசினால் கேட்குமா?

📓பார்த்தால் சிரிக்குமா?

📓உணவு ஊட்டினால் உண்ணுமா?

📓இப்படி நம் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஒரு கல் எப்படி கடவுளாகும்

📓இவை எதையும் செய்யாத  ஒரு கல் எப்படி கடவுளாகும்.

💠நன்றி:  🎥நியூஸ் மீடியா 🎥

J.Prabu follow in FB
_______________

தேவதாசிகள்

தேவதாசிகளை பற்றிய மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்!


கோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என அழைக்கப்படும் தேவர் அடியார்கள். இவர்கள் ஆன்மீக இலக்கியம் கோலோச்சி இருந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மிக மரியாதையாக பார்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப் போக்கில் இவர்களது பெயர் மட்டுமின்றி இவர்களது மரபும், கலாச்சாரமும் மரியாதையும் கூட மருவிவிட்டது. போதிய அங்கீகாரம் மற்றும் கவனிப்பு இல்லாமல் போனதால் தேவதாசிகள் மிகக் கீழ்த்தரமான முறையில் சித்தரிக்கப்பட்டனர்.

தமிழ் மரபு
தேவதாசிகள் தமிழ் கலாச்சாரத்திற்கும், கலைகளுக்கும் செழுமை சேர்த்த ஓர் சமூக மரபு கொண்டிருந்தவர்கள்.

தேவதாசி
தேவதாசி என்பவர்கள் கடவுள் அல்லது கோவிலுக்காக அர்பணிக்கப்பட்ட பெண்கள் ஆவர்கள். இவர்கள் கோவில் மற்றும் கடவுளுக்கு திருப்பணிகள் செய்வதற்காக தானம் கொடுக்கப்பட்டவர்கள்.

தேவதாசி ஆவதற்கு சடங்கு
தேவதாசியின் வாழ்க்கை என்பது ஆர்வம் நிறைந்த சுவாரஸ்யமான கதையாகும். ஒரு பெண் தேவதாசியாக வேண்டும் எனில், அவள் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் சிலவற்றின் ஊடாகப் பயணித்து வர வேண்டும் எனப்படுகிறது.

தேவதாசி ஆவதற்கு சடங்கு
சடங்குகள்…
1. சடங்கு பூர்வமான திருமணம்
2. அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு
3. நிகழ்த்து கலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்
4. அரங்கேற்றம்
5. கடமைகள் மற்றும்
6. இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்

கி.பி. 900
பல கல்வெட்டுகளில் தேவர் அடியார்கள் எனப்படும் தேவதாசிகள் பெருமான் கோயிலில் கலைகளை காத்து வந்தவர்கள் என்றும். நடனம் மற்றும் பாடல்கள் இயற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர் என்றும் பல கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன.

கி.பி. 1230
கி.பி 1230-40-க்கு இடைப்பட்ட காலத்தில் இப்போது மகாராஷ்டிரா என அழைக்கபப்டும் நிலத்தை ஆண்ட மன்னன் ராகவாச்சாரியார் தனது குறிப்புகளில் தேவதாசி என குறிபிடப்பட்டுள்ள தகவல்கள் தான் தேவதாசிகளின் தொடக்கமாக கருதப்பட்டு வருகிறது.

மேகதூத்
தேவதாசி எனும் இந்த பெயர் முதன் முதலில் காளிதாஸ் எழுதிய மேகதூத் எனும் படைப்பில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. தேவரடியார்கள் எனும் பெயரின் பொருளானது தேவர் (இறைவன்) + அடியவர்கள் (சேவகர்கள்), அதாவது இறைவனுக்கு சேவை செய்து வந்தவர்கள் ஆகும்.

அர்ச்சகர்கள்
தேவதாசிகள் என்பவர்கள் சமூகத்தில் பெரும் புகழ் மற்றும் மரியாதையுடன் காணப்பட்டவர்கள். கோவிகளில் அர்ச்சகர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்பட்டவர்கள் இவர்கள் எனவும் வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.

சமூக சேவைகள்
தேவதாசிகள் அவர்களது கலைக்கு கிடைத்த பரிசுகளை மக்களுக்கு நல்ல சேவைகளும் செய்து வந்துள்ளனர். கால்வாய் அமைப்பது, கிராமப்புற சேவைகள் செய்வது என நல்ல வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் தான் இந்த தேவதாசிகள்.

விண்ணமங்கலம்
விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டு தோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன. நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகிய இரண்டு தேவதாசிகள் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர்.

அன்னாடு
அன்னநாடு என்ற இடத்திலும் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயே படையெடுப்பு
சமூகத்தில் புனிதமாக காணப்பட்டு வந்த இவர்கள், ஆங்கிலேயே படையெடுப்பிற்கு பிறகு தான் களங்கப்படுத்தப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

அரசர் கொடுமைகள்
சில அரசர்கள் மற்றும் சாம்ராஜியத்திலும் கூட கடவுள் திருப்பணிக்காக அர்பணிக்கப்பட்ட இவர்கள், தனிப்பட்ட அரசர்கள் அல்லது பெரும் நபர்களின் இச்சைக்காக இரையாக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது.

சாதிப்பிரிவுகள்
சாதி பிரிவுகள் வரத் துவங்கிய காலக்கட்டத்தில் இவர்கள் இக்காரணம் கண்டு கீழ் சாதி பிரிவில் சேர்க்கப்பட்டனர். மேலும், இவர்கள் காமத்திற்காக மட்டும் காணப்படுபவர்கள் எனும் சாயம் பூசப்பட்டது.

அவச்சொல்
கடவுளுக்கு இறைப்பணியாற்ற அர்பணிக்கப்பட்ட இவர்கள், சிலரது இச்சை பசிக்கு இரையாகி, இப்போது இவர்களது பெயரே சமூகத்தில் ஓர் அவச்சொல்லாக மாறியிருக்கிறது

J.Prabu -Follow in FB

Monday, 4 April 2016



1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...

👉சொத்து
👉ஸ்திரி
👉உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉தாய்
👉தந்தை
👉குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..

சும்மா கடவுள் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்

இனி உங்கள் கையில்....🙏🙏

J.Prabu -Follow in FB

வாழ்க்கை வாழ்வதற்கே



ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.ஆனால் இதில் சில கண்டிஷன்கள் உண்டு.அவை-

1)அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2)உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.

3)அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4)ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400ரூபாய் வரவு வைக்கப்படும்

5)எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6)வங்கி"முடிந்தது கணக்கு"என்று சொன்னால் அவ்வளவுதான்.வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள்.ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால்- அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள் தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை -நிதர்சனமான உண்மை

ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப்படுவதில்லை.

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள்.

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.

எனவே உங்களைப் பொன் போலபேணுங்கள் சந்தோஷமாக இருங்கள் சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.!!

J.Prabu - Follow in FB

Sunday, 3 April 2016

History about Madurai


வான் நோக்கி உயர்ந்து வரும் கட்டடங்கள், மக்கள் நெரிசலால் திணறும் தெருக்கள், வாகனங்களின் பெருக்கத்தால் பரபரப்பாக காணப்படும் சாலைகளையும் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், கலாச்சார தலைநகரமாகவும் விளங்கும் மதுரை மாநகரம், ஆதியில் வனங்கள் சூழ்ந்த கடம்பவனமாக இருந்தது.

வைகை நதியோரம், 2600 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது மதுரை. முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாய் இருந்தது கோவில் மாநகர் எனப்படும் மதுரை. கீழ்திசையின் ஏதென்ஸ் என்று அழைக்கப்பட்ட நகரம். தமிழகத்தின் மிகப் பழமையான நகரம். ராமாயணத்திலும், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும் இடம் பெற்ற பெருமைக்குரியது.

மெகஸ்தனீஸ் (கி.. 302), பிளினி (கி.பி. 77), தாலமி (கி.பி.140) ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் மதுரைக்கு வந்துள்ளனர். தங்களது பயணக்குறிப்புகளில் மதுரை குறித்துக் கூறியுள்ளனர். மார்க்கோ போலோ கி.பி. 1293-ம் ஆண்டு மதுரை வந்துள்ளார்.

வரலாறு: தனஞ்செயன் என்ற விவசாயி ஒருறை வனப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கடம்ப மரம் ஒன்றிற்குக் கீழ் சுயம்பு லிங்கம் இருப்பதையும், கடவுள்களின் கடவுளான இந்திரன் அதை வணங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். இந்த செய்தியை, மன்னர் குலசேகர பாண்டியனிடம் சென்று தெரிவித்தார். உடனடியாக அந்தப் பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்ட மன்னர், சுயும்பு லிங்கத்தை மையமாக வைத்துக் கோவில் கட்டவும், அக்கோவிலை மையமாக வைத்து புதிய நகரம் அமைக்கவும் உத்தரவிட்டார்.

நகரம் உருவானது. அதற்கு என்ன பெயர் வைப்பது என்று மன்னர் உள்பட அனைவரும் யோசித்தனர். அப்போது, சிவன் அங்கு தோன்றி, தனது தலை முடியிலிருந்து சில தேன் துளிகளை நகரின் மீது தூவினார். இதையடுத்து புதிய நகருக்கு மதுராபுரி என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரம் என்றால் இனிமை என்ற பொருளில் இப் பெயர் வந்தது.

மதுரை நகரம் பலமான கலாச்சாரப் பின்னணியைக் கொண்டது. சிவன் தனது 64 திருவிளையாடல்களை இந்த புராதன நகரில்தான் நிகழ்த்தினார்.

சோழ மன்னர்கள் கி.பி. 10-வது நூற்றாண்டின் துவக்கத்தில் மதுரையைக் கைப்பற்றும் வரை மதுரை மாநகரம் சொர்க்க பூமியாக இருந்தது. பாண்டிய மன்னர்களின் காலமே, மதுரையின் பொற்காலமாக கூறப்படுகிறது. 13-வது நூற்றாண்டின் துவக்கம் வரை மதுரை, சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சோழர்களிடமிருந்து கி.பி. 1223-ம் ஆண்டில் மதுரையை, பாண்டியர்கள் மீட்டனர். மறுபடியும், மதுரை மலர்ச்சி கண்டது.

பாண்டிய மன்னர்களின் காலத்தில் தமிழ் மொழி பெரும் வளர்ச்சி கண்டது. கணவன் கொலை செய்யப்பட்டதும், ஆவேசமடைந்து மதுரையை எரித்த கண்ணகியின் வரலாற்றுக் காதையான, சிலப்பதிகாரத்தின் கதைக் கரு மதுரையை மையமாகக் கொண்டது. வேறு பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளும் மதுரை வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. 1311-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தில்லி பாதுஷா, அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர், மதுரை மீது படையெடுத்தார். மதுரை நகரிலிருந்த விலை மதிப்பற்ற நவரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பிற பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்.

மாலிக்காபூர் படையெடுப்பிற்குப் பிறகு வேறு சில கம்மதிய மன்னர்களும் மதுரையை பல்வேறு கட்டங்களில் ஆக்கிரமித்துள்ளனர். 1323-ல் துக்ளக் மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் போது, தில்லியின் ஆதிக்கத்தின் கீழ் மதுரை இருந்தது.

1371-ல் ஹம்பியைத் தலைநகராகக் கொண்ட விஜயநகர மன்னர்கள் மதுரை மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினர். இதையடுத்து விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மதுரை மாறியது. தாங்கள் பிடித்த பகுதிகளை நாயக்கர்கள் எனப்படும் தங்களது ஆளுநர்களிடம் விட்டு விட்டுச் சென்று விடுவது விஜயநகர மன்னர்களின் பழக்கம். எனவே மதுரையும், நாயக்கர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் மறைவுக்குப் பிறகு, 1530-ல் நாயக்கர்கள் தனி அதிகாரம் படைத்தவர்களாக மாறினர். தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை தாங்களே ஆளத் துவங்கினர். மதுரையை ஆண்ட நாயக்கர்கள் மத்தியில் திருமலை நாயக்கர் மிகப் பிரபலமானவர். மக்களிடம் அதிக நற்பெயரைப் பெற்றவர். மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜ கோபுரம், புது மண்டபம் எனப்படும் வசந்த மண்டபம், மஹால் அரண்மனை ஆகியவை அவர் கட்டியவை.

1781-ல் மதுரை, ஆங்கிலேய, கிழக்கிந்திய கம்பெனியரின் கைக்கு மாறியது. மதுரையின் நிர்வாகத்தைக் கவனிக்க, ஜார்ஜ் பிராக்டர் என்பவர் பிரதிநிதியாக கிழக்கிந்திய கம்பெனியாரால் நியமிக்கப்பட்டார். இவரே, மதுரையின் முதல் ஆட்சியர் ஆவார்.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மதுரையின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. வைகை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. நூறு ஆண்டுகளைக் கடந்தும், இன்றும், வட மற்றும் தென் மதுரை மக்களுக்கு இடையே உறவுப் பாலமாக விளங்கி வருகிறது.

மதுரை நகரின் தனிச் சிறப்பே, அதன் நகர வடிவப்ைபுதான். மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து, அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகள் பழம் மதுரையின் மிச்சங்கள். இந்தியாவின் மிகச் சிறந்த நகர வடிவப்ைபுகளின் பட்டியலில் மதுரையும் உள்ளது, மதுரை மக்களுக்குப் பெருமை அளிப்பதாகும்.

சுதந்திரத்திற்குப் பிறகு மதுரை, தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக மாறியது. இன்று சென்னைக்குப் பிறகு முக்கிய நகராக மதுரை உள்ளது. பாரம்பரியம், புராதன வரலாறும், செறிவான கலாச்சாரப் பின்னணியுமே, இந்தப் பெருமையை மதுரைக்குக் கொடுத்துள்ளது.

இன்றைய மதுரை: இன்றைய மதுரையின் உள்ளாட்சி நிர்வாகம் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. சென்னைக்குப் பிறகு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட நகரம் மதுரைதான். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரையில் வசிக்கின்றனர். மதுரைக்கு தினந்தோறும் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை, இந்த எண்ணிக்கையில் பாதியாகும்.

22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக மதுரை நகரம் உள்ளது. நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பல கோவில்கள் மிகவும் பழமையான பின்னணியைக் கொண்டவை. வடக்கு மாசி வீதியில் உள்ள செல்லத்தம்மன் கோவில், மேல மாசி வீதியில் உள்ள நக்கீரர் கோவில் ஆகியவை வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை. செல்லத்தம்மன் கோவிலில் கையில் சிலம்புடன் இருக்கும் கண்ணகி சிலையைக் காணலாம்.

சிறந்த போக்குவரத்து வசதி, நல்ல கல்விச் சூழ்நிலை, வளர்ந்து வரும் தொழில் துறை, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மருத்துவ வசதிகள், மணம் வீசும் மல்லிகைப் பூ வர்த்தகம், பேர் சொல்லும் சுங்கிடிச் சேலைகள் என மதுரைக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பொதுத் தகவல்கள்

பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.

மக்கள் தொகை: 10,93,702 (1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி).

காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.

குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.

மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.

ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.

மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா.

நன்றி ஒன்இந்தியா Follow in FB

வாட்ஸ்அப் புகைப்படங்கள் கேலரியில் (Gallery) தோன்றாமல் மறைப்பது எப்படி? (ஆண்ட்ராய்டு)

வாட்ஸ்அப் புகைப்படங்கள் கேலரியில் (Gallery) தோன்றாமல் மறைப்பது எப்படி? (ஆண்ட்ராய்டு)


வாட்ஸ்அப் சேவையானது இன்று பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.




அந்தவகையில் எமது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏனையவர்களால் வாட்ஸ்அப் மூலம் எமக்கு அனுப்பப்படக்கூடிய புகைப்படங்கள் எமது ஸ்மார்ட் போனில் சேமிக்கப்படுவதால் எமது போனில் இருக்கும் கேலரி (Gallery) மூலமும் அவற்றை பார்க்க முடிகிறது.


எனினும் எமது ஸ்மார்ட் போனை நண்பர்களோ அல்லது ஏனையவர்களோ பயன்படுத்தும் போது கேலரியில் இருக்கும் எமது தனிப்பட்ட வாட்ஸ்அப் புகைப்படங்களையும் பார்ப்பதற்கு இடமுண்டு.

கேலரியில் தோன்றக்கூடிய வாட்ஸ்அப் புகைப்படங்களை மறைப்பது எப்படி?

எனவே சிறியதொரு உபாயத்தை பயன்படுத்தி கேலரியில் தோன்றக்கூடிய எமது வாட்ஸ்அப் புகைப்படங்களை மறைத்துக்கொள்ள முடியும்.

நீங்களும் இதனை மேற்கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.

மூன்றாம் நபர் பைல் மேனேஜர் (File Manager) அப்ளிகேஷன் ஒன்றை பயன்படுத்தி இதனை மிக இலகுவாக மேற்கொள்ளலாம்.

இதற்கு ஈ.எஸ் பைல் எக்ஸ்ப்ளோரர் அப்ளிகேஷன் சிறந்தது.



1. முதலில் குறிப்பிட்ட அப்ளிகேஷன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் வாட்ஸ்அப் (Whatsapp) கோப்புறையை (Folder) தேடிப்பெற வேண்டும்.



2. பின்னர் குறிப்பிட்ட கோப்புறைக்குள் இருக்கும் மீடியா (Media) ===> Whatsapp Images எனும் கோப்புறையை திறந்துகொள்ளுங்கள்.





3. இனி  ஈ.எஸ் பைல் எக்ஸ்ப்ளோரர் அப்ளிகேஷனின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள பிளஸ் குறியீட்டை (+) சுட்டும் போது தோன்றும் சாளரத்தின் ஊடாக File என்பதை சுட்டுக.





4. பின் அதற்கு .nomedia என பெயரிடுக.

அவ்வளவுதான்...!
இனி வாட்ஸ்அப் புகைப்படங்கள் கேலரியில் தோன்ற மாட்டாது.


வாட்ஸ்அப் புகைப்படங்கள் மீண்டும் கேலரியில் தோன்றச் செய்ய விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.

1. ஈ.எஸ் பைல் எக்ஸ்ப்ளோரர் அப்ளிகேஷனின் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகளால் ஆன மெனு குறியீட்டை சுட்டுக.




2. பின்னர் தோன்றும் சாளரத்தில் "Show hidden files" என்பதை செயற்படுத்திக் கொள்க.

3. பின்னர் வாட்ஸ்அப் (Whatsapp)  ===> மீடியா (Media) ===>  Whatsapp Images எனும் கோப்புறைக்கு மீண்டும் செல்க.

4. இனி அதில் நீங்கள் உருவாக்கிய .nomedia எனும் கோப்பை நீக்கி விடுக

அவ்வளவுதான்.


உதவிக் குறிப்புகள்:

மேற்கூறிய முறையில் .nomedia எனும் கோப்பை உருவாக்கிய பின்னும் வாட்ஸ்அப் புகைப்படங்கள் கேலரியில் இருந்து மறையவில்லையா?
அப்படியாயின் Settings ===> Genaral ===> Application Manager எனும் பகுதி மூலமாக Gallery ஐ தெரிவு செய்து Clear Cache என்பதை சுட்டுக.


Thank you for visit my page,pls support my page : https://m.facebook.com/friends.04/