Tuesday, 13 March 2018

கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது என்றும்தயங்கினர் !


ஒரு ராஜா அவரோட
தளபதிக்கு வயசாயிடுச்சுனு வேற
ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு.
இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன்வந்தாங்க.
ராஜா, தகுதி உள்ள எல்லாரையும்
அரண்மனைக்கு வரச்சொல்லி, ” இந்த
கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40
அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட
கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது.
இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க
முடியலை”. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம்
ராஜா பேசினாரு.
இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம்இருந்திருப்பாங்க .அவங்களாலயே திறக்கமுடியல ! நம்மால
எப்பிடி முடியும்னு கிளம்பிட்டாங்க.
இதை கேட்ட கூட்டம் 10
பேரா குறைஞ்சுடுச்சு! .
ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த
இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும்அந்த கதவை பார்த்து பிரமிச்சு
நின்னுகிட்டுருந்தாங்க!! இந்த
கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற
தகுதி இருக்கிறது என ராஜா எல்லாரிடமும்
கூறினார் .
கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது என்றும்தயங்கினர் !
ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய்
கையை வெச்சு தள்ளி பார்த்தான். அடஎன்ன
ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு!!!
பல பேர் தயங்குவதனாலும்,
ஒருவர் சொல்வதனாலும் முயற்சி செய்யாமல்
இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்!
என ராஜா அவனையே பாராட்டி தளபதி பதவியைவழங்கினார்...
“அது முடியாத காரியம்” என எப்போது உன்
காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ
அப்போதே புரிந்து கொள் நீ
சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டாய்
என்று !!!!!!!பிறகென்ன தூள் கிளம்புங்க.

அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது


“ஒரு நாள் வழக்கம்போல நான் ஜாகிங் செய்துகொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது.
சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.
அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
மெதுமெதுவே அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 1௦௦ அடிகளே இருந்தன. என் வேகத்தை சட்டென்று கூட்டினேன்.
இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……..அவரைப் பிடித்தே விட்டேன் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்!
‘அப்பாடி, முந்தி விட்டேன்!’
பின்னால் திரும்பிப் பார்த்தேன். அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார். அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது!
சந்தோஷம் சற்று அடங்கிய பின் தான் நான் என் பாதையை தவற விட்டு விட்டதை உணர்ந்தேன்!
அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஓடிய நான், நான் திரும்ப வேண்டிய தெருவை விட்டு விட்டு ஆறு தெருக்கள் தாண்டி வந்து விட்டேன்.
இப்போது வந்த வழியே திரும்பி அத்தனை தூரத்தையும் கடந்து நான் என் வீட்டிற்கு போக வேண்டும்.
இதேபோலத்தான் நம் வாழ்விலும் சிலசமயம் நடக்கிறது, இல்லையா?
நம்முடன் வேலை செய்பவர்களுடனும், அண்டை அயலில் இருப்பவர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் போட்டி போட்டு அவர்களை மிஞ்ச வேண்டும் என்றோ, அல்லது அவர்களை விட நாம் பெரியவர்கள் என்றோ நிரூபிக்க முயலும் போதும் இதே தான் நடக்கிறது இல்லையா?
நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களை விட வெற்றிகரமானவர்கள் / முக்கியமானவர்கள் என்று நிரூபிப்பதிலேயே செலவழிக்கிறோம். நம்முடைய பொறுப்புகளை மறக்கிறோம். நாம் பயணம் செய்ய வேண்டிய பாதைகளை மறக்கிறோம்.
நமக்கென்று கடவுள் கொடுத்திருக்கும் வேலைகளை செய்யத் தவறுகிறோம்.
இந்த மாதிரியான ஆரோக்கியமில்லாத போட்டி முடிவில்லாத ஒரு சுழல். இந்தச் சுழலில் மாட்டிக் கொண்டுவிட்டால் வெளியே வருவது கடினம்.
சற்றே சிந்திக்கலாமா நட்பூக்களே

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?



எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.
எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.
நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.
எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.
1. தியானம்
தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2. புன்னகை
கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
3. நண்பர்கள்
முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.
4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்
சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.
5. குறைகூறாதீர்கள்
உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.
6. உதவுங்கள்
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.
7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
8. பாடுங்கள்
உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.
9. நன்றி கூறுங்கள்
நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.
10. நல்லதை படியுங்கள்
தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.
எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.
---வலைத்தளங்களில் கிடைத்தது.. நன்றி நன்றி 

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா
யார் போனா என்ன
யார் போனா
யார் போனா
யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி
பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்
உயிர் வாழுரேண்டி

இதுவும் கடந்து போகும்..


நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.
வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?
வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?
எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல.* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
*வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.*
*தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *சோர்ந்து விட மாட்டீர்கள்.*
*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை *கௌரவிப்பீர்கள்.* அவர்கள் விலகும் போது பெரிதாக *பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.*
*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் *பொறுமை வரக்* காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.
*நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் *முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.*
நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.
வாழ்க வளமுடன்.

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........


கணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.
பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.
பாலைத் தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.
தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும்.
பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
ஒரு வேளை அப்படித் தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி எழுந்து அடுப்பையே அனைத்துவிடும்.
கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.
# புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.....
# எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.....
மறக்காமல் Like & Share செய்யுங்கள்....
👌படித்ததில் சிறந்தது👌

அவசரம் 108... தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 3 இன் 1 செயலி


நாட்டிலேயே முதன் முறையாக 108 ஆம்புலன்ஸ் உதவிக்கு தமிழக அரசு செயலியை அறிமுகம் செய்துள்ளது. விபத்து, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, காவல்துறைக்கு இந்த செயலியை பயன்படுத்தலாம். அவசரம் 108 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி மூலம் தொடர்புகொண்டால் அழைக்கும் இடத்தை கட்டுப்பாட்டு அறையால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும். சென்னை தலைமைச் செயலகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக 22 புதிய வாகனங்களை பயன்பாட்டிற்காக முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதே போன்று 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக நாட்டிலேயே முதன்முறையாக 'அவசரம் 108' என்ற செயலியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : 108 ஆம்புலன்ஸ் வாகன உதவியை எளிதில் பெய அவசர 108 என்ற செயலியை ஐஐடி தயாரித்து அளித்துள்ளது. இது இன்று முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 108 உதவி மையத்திற்கு நாள்தோறும் 17 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. இவற்றல் 50 சதவீதம் ஆன்ட்ராய்டு போனில் இருந்து தான் அழைப்பு வருகிறது. எனவே விபத்து நடந்த பகுதியை எளிதில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்டுபிடிக்கும் வகையில் இந்த செயலி உதவும். app for android ஆன்டிராய்டு போன்களில் கூகுள் பிளேஸ்டோர் மூலம் அவசரம் 108 (Avasaram 108) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும். காவல்துறை, விபத்து, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு இந்த ஒரே செயலி பயன்படும். இந்த செயலி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு சென்றுவிடும். இணையதள வசதி இல்லாமல் குறுந்தகவல் மூலமாக புகார் செய்யும் வசதியையும் முயற்சித்து வருகிறோம். இதே போன்று ஆன்ட்ராய்டு தவிர்த்து மற்ற போன்களில் பயன்படுத்தும் வகையில் இந்த செயலியின் சேவை விரிவாக்கம் செய்யப்படும். தமிழகத்தில் மெட்ரோ சிட்டிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை 10 நிமிடத்திலும், கிராமப்புறங்களில் 14 நிமிடத்திலும் சென்றடைகிறது. மேலும் டூ வீலர் ஆம்புலன்ஸ் சேவை 9 நிமிடத்தில் மக்களை சென்றடைகிறது என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.