பின்கோடு என்று அழைக்கப்படும் அஞ்சல் குறியீட்டு எண்கள் அல்லது அஞ்சலகச் சுட்டு எண் (PIN - Postal Index Number) இந்தியாவின் அஞ்சல் சேவைக்காக இந்திய அஞ்சல்துறையினால் ஆகஸ்ட் 15 , 1972 அன்று ஆறு இலக்கங்கள் கொண்ட எண் முறையை ஏற்படுத்தியது.
இந்தியா ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் எண்கள் கொடுக்கப்பட்டன. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது என்பதையும், இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மற்றும் மூன்றாவது எண் வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப்படுத்துகிறது.
இந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது பின்கோடு மண்டலங்கள்:
1 - டில்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஸ்மீர்(பாகிஸ்தான்-ஆளுமை கீழுள்ள காஸ்மீர் உட்பட), சண்டிகார்
2 - உத்திரப் பிரதேசம், உத்தராகண்டம்
3 - இராஜஸ்த்தான், குஜராத், டாமன் டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
4 - மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்
5 - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்
6 - தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி
7 - ஒடிசா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்
8 - பீகார், ஜார்க்கண்ட்
9 - இராணுவ அஞ்சலகம்(APO) மற்றும் கள அஞ்சலகம் (FPO)
No comments:
Post a Comment