தனது 5 ஆவது வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான தாய், அந்த கொடுமையின் மூலம் தனது வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத வலி மிகுந்த தருணங்களை தனது மகனுக்கு கடிதமாக எழுதியுள்ளார்.
அன்புள்ள மகனுக்கு,
எனக்கு 5 வயது இருக்கும். அன்று ஒருநாள் இருட்டிய அறையில் படுத்துக்கிடந்தேன். அப்போது எனது ஆடைகள் களையப்பட்ட நிலையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது.
அந்த படுக்கையில் இருந்து என்னால் நகர முடியவில்லை, என்னால் பேசமுடியவில்லை, எனது கண்களை கூட திறக்க முடியவில்லை. மிகுந்த அச்சத்தோடு படுத்திருந்த நான் மிகவும் சிரமப்பட்டு லேசாக கண்களை திறந்து பார்த்தபோது என் கண்முன்னே 3 ஆண்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்கள், என்னை என்ன செய்தார்கள் என்பதை முழுமையாக என்னால் உணர முடியவில்லை.
ஆனால் இதற்கு முன்னால் அவர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய வீட்டிற்கு வருவார்கள், என்னோட சில நேரங்களில் விளையாடுவார்கள், எனக்கு சொக்லேட் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
காலங்கள் கடந்து எனக்கு 12 வயது ஆனது மற்ற சிறுமிகள் போலவே சைக்கிளில் நானும் பள்ளிக்கு சென்றேன். நான் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் தெரு முனையில் உள்ள ஒரு ஆண் தினமும் நின்றுகொண்டு, என்னை பார்த்துக்கொண்டிருப்பான்.
என்னை விழுங்குவது போன்று பார்க்கும், அவனது அருகில் சென்று கன்னத்தில் ஒரு அறை கொடுக்க வேண்டும் என்று தோன்றும்.
ஆனால் எனது கோபத்தை உள்ளடக்கி கொண்டு, அத்தனை கோபத்தினையும் சைக்கிள் பெடல் மேல் காட்டி, அதனை வேகமாக அழுத்திகொண்டு பள்ளிக்கு சென்றுவிடுவேன்.
அதன் பின்னர் கல்லூரிக்கு செல்லும் வயதை எட்டினேன். கல்லூரிக்காக பேருந்தில் செல்கையில், ஆண்களின் காமப்பெருமூச்சுகள் என்னை சுட்டெரிக்கும்.
என்னதான் நாகரீமான ஆடைகளை அணிந்துசென்றாலும், அவர்களின் காமப்பார்வைகள் என்னைபோன்ற கல்லூரி பெண்களின் அங்கங்களை துளைக்கும்.
இதன் காரணமாக எனது வாழ்வில் பல்வேறு தியாகங்களை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
எனது வாழ்வில் நான் சந்தித்த பாலியல் துன்பங்களின் காரணத்தினாலேயே, எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
ஏனெனில் நான் எனது வாழ்வில் சந்தித்த சோதனைகளை அவளுக்கு புரியவைத்து, சமுதாயத்தில் அவள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக.
ஆனால், எனக்கு மகனாக நீ பிறந்துள்ளாய். இருப்பினும் இந்த சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கு நீ மரியாதை செலுத்த வேண்டும். பெண்களை ஒருபோது எதிரிகளாக பார்க்ககூடாது. அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
பெண்கள் நம்பிக்கையான நல்ல நண்பர்களாக இருப்பார்கள், நீ எனக்கு மரியாதை கொடுக்கிறாய் என்றால், அது சமுதாயத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு மரியாதை கொடுப்பதற்கு சமம் என எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment