Saturday, 8 October 2016

*இலங்கை வாழ் மக்கள் அறியவேண்டிய முக்கிய விடயம்! தவறாமல் படியுங்கள்.*

மனிதன் அன்றாடம் தனது வாழ்வில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது.

 பிறந்த குழந்தைகளிலிருந்து தள்ளாடும் வயோதிபர்கள் வரை உதவிகள் எப்போது தேவைப்படும் என்பது யாரும் அறியாத விடயம்.அவ்வாறு எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாருக்கு அறியப்படுத்துவீர்கள்? எவ்வாறு பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்? இவ்வாறு பல வினாக்கள் எழும்.

இதற்கான தீர்வுகளையே இப்போது உங்களுக்காக நாம் கொண்டுவந்துள்ளோம். ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ, விபத்துக்கள் ஏற்பட்டாலோ எடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.

1. அவசர பொலிஸ் பிரிவு - 119, 011-5717171

2. அம்புலன்ஸ் (கொழும்பு) - 110

3. பெண்களிற்கெதிரான வன்முறைகள்- 1938

4. அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் - 1919

5. நீர் வடிகாலமைப்புச் சபை - 1939

6. போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் - 1984

7. குடியகல்வு மற்றும் குடிவரவு - 1962

8. கல்வி அமைச்சு - 1988

9. மொழிகள் சார் பிரச்சினைகள் - 1956

10. உளநலம் சார் பிரச்சினைகள் - 021222 6666

11. சட்ட உதவி ஆணைக்குழு - 021 222 4545

12. சிறுவர் துஸ்பிரயோகம் - 1929

13. பரீட்சை திணைக்களம் - 1911

14. உயர்கல்வி அமைச்சு - 1918

15. தேசிய உதவி மையம் - 118

16. போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு - 011-2691111

17. குருதி வங்கி - 011-2695728, 011-2692317, 011-2674799

18. செஞ்சிலுவை - 011-2672727

19. தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் - 011-2422222, 110

20. இராணுவ தலைமையகம் - 011-2432682

21. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு - 011-2691500, 011-2437515, 011-2330646

22. குற்றப்பிரிவு - 011-2691500

23. பொலிஸ் தலைமையகம் - 011-2421111

24. மின்சார தடை - 011-2466660, 011-4617575

25. அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் - 011-2421052

26. தொலைபேசி இணைப்பு - 112

27. தேசிய அவசர பிரிவு - 011-2691095, 011-2699935

28. விபத்து பிரிவு - 011-2693184

29. சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை - 011-2437744

30. மோசடி பணியகம் - 0112583512

31. சட்ட உதவி ஆணைக்குழு - 0112433618

32. கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் - 011-2691111

33. செஞ்சிலுவை அம்புலன்ஸ் - 011-5555505

34. மத்திய பேருந்து நிலையம் - புறக்கோட்டை - 011-2329606

35. கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு - 011-2434215

36. வடக்கில் தமிழில் முறைபாடுகளை மேற்கொள்ள - 076-6224949, 076-6226363

37. மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சு - 1901

38. பொது நிர்வாக அமைச்சு - 1905

39. அபிவிருத்தி தொடர்பான தகவல்களும் முறைபாடுகளும் - 1912

40. இலங்கை விமான சேவைகள் மற்றும் விபரங்கள் - 1979

41. சூழல் தொடர்பான பிரச்சினைகள்மற்றும் முறைபாடு - 1991

42. விசாரணை மற்றும் கண்காணிப்பு- 1905

43. IMEI மீளாய்வு அலகு - 1909

44. விவசாயிகளுக்கான சேவைகள் - 1918

45. மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் - 1996

46. வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களதுமுறைபாடுகள் - 1989

47. தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் - 1984

48. நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் - 1977

49. பிரதமர் - 011-2321406

50. மக்கள் வங்கி தொடர்பான சேவைகள் - 0112481481

51. இலங்கை மத்திய வங்கி - 011-2477415, 011-2477411, 011-2477416, 011-2477417

52. இலங்கை மின்சக்தி நிறுவனம் - 1910

53. விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் - 1920

54. அவசர அதிவேக பிரிவு - 1969

55. இலங்கை மின்சார சபை - 1987

56. தேசிய வைத்தியசாலை - 1959

57. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு - 1966

58. வீதி அபிவிருத்தி அதிகாரசபை - 1968

59. தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் - 1900

60. புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) - 011-2842052

Saturday, 1 October 2016

இவர் யாரென்று எத்தனை பேருக்குத்தெரியும்

இவர் யாரென்று எத்தனை பேருக்குத்தெரியும்
சரி,தெரிந்து கொள்வதற்கு முன்பு இவருக்கு உங்கள் நண்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்
ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்
DR. JONAS SALK, இவர்தான் போலியோவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்
சரி எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு
இவர் போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த பிறகு Patented Right வாங்க மறுத்துவிட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம் சினிமாப்படம் Copy rights வாங்குவது போல)
அவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலே மிகப்பெரிய பணக்காரர் ஆகியிருப்பார்
ஆனால் அப்படிச்செய்திருந்தால் பல கோடி ஏழைஎளிய மக்கள் அந்த மருந்தை வாங்கமுடியாமல் நோய்வாய்ப்பட்டு இறந்திருப்பார்கள்
பேட்டியொன்றில் "நீங்கள் ஏன் உரிமம் பெறவில்லை" எனக்கேட்டதற்கு "சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா" என்று கேட்டார் அந்த மாமனிதர்
பில்கேட்ஸ்,ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களைப்போற்றும் இந்த உலகம் இவரை யாரென்று கூடத்தெரிந்து கொள்ளாதது கசப்பான உண்மை
இவருக்கு நண்றி தெரிவிக்க நினைத்தால் இத்தகவலைப் பகிரவும்
உங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்ளட்டும்

follow in facebook

Friday, 30 September 2016

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??




சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல,

உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு.

பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,

சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள்

அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி
சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்

,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.

அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,

471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று

இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.

இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada

20-29: In-Store Functions

30-37: France

40-44: Germany

45: Japan (also 49)

46: Russian Federation

471: Taiwan

474: Estonia

475: Latvia

477: Lithuania

479: Sri Lanka

480: Philippines

482: Ukraine

484: Moldova

485: Armenia

486: Georgia

487: Kazakhstan

489: Hong Kong

49: Japan (JAN-13)

50: United Kingdom

520: Greece

528: Lebanon

529: Cyprus

531: Macedonia

535: Malta

539: Ireland

54: Belgium & Luxembourg

560: Portugal

569: Iceland

57: Denmark

590: Poland

594: Romania

599: Hungary

600 & 601: South Africa

609: Mauritius

611: Morocco

613: Algeria

619: Tunisia

622: Egypt

625: Jordan

626: Iran

64: Finland

690-692: China

70: Norway

729: Israel

73: Sweden

740: Guatemala

741: El Salvador

742: Honduras

743: Nicaragua

744: Costa Rica

746: Dominican Republic

750: Mexico

759: Venezuela

76: Switzerland

770: Colombia

773: Uruguay

775: Peru

777: Bolivia

779: Argentina

780: Chile

784: Paraguay

785: Peru

786: Ecuador

789: Brazil

80 – 83: Italy

84: Spain

850: Cuba

858: Slovakia

859: Czech Republic

860: Yugoslavia

869: Turkey

87: Netherlands

880: South Korea

885: Thailand

888: Singapore

890: India

893: Vietnam

899: Indonesia

90 & 91: Austria

93: Australia

94: New Zealand

955: Malaysia

977: International Standard Serial Number for Periodicals (ISSN)

978: International Standard Book Numbering (ISBN)

979: International Standard Music Number (ISMN)

980: Refund receipts

981 & 982: Common Currency Coupons

99: Coupons

follow in facebook

பிரசவம் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!


Wednesday, 28 September 2016

காமப்பெருமூச்சு என்னை சுட்டெரித்த அந்த நாள்..! மகனுக்கு தாய் எழுதிய கடிதம்


தனது 5 ஆவது வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான தாய், அந்த கொடுமையின் மூலம் தனது வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத வலி மிகுந்த தருணங்களை தனது மகனுக்கு கடிதமாக எழுதியுள்ளார்.

அன்புள்ள மகனுக்கு,

எனக்கு 5 வயது இருக்கும். அன்று ஒருநாள் இருட்டிய அறையில் படுத்துக்கிடந்தேன். அப்போது எனது ஆடைகள் களையப்பட்ட நிலையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது.

அந்த படுக்கையில் இருந்து என்னால் நகர முடியவில்லை, என்னால் பேசமுடியவில்லை, எனது கண்களை கூட திறக்க முடியவில்லை. மிகுந்த அச்சத்தோடு படுத்திருந்த நான் மிகவும் சிரமப்பட்டு லேசாக கண்களை திறந்து பார்த்தபோது என் கண்முன்னே 3 ஆண்கள் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்கள், என்னை என்ன செய்தார்கள் என்பதை முழுமையாக என்னால் உணர முடியவில்லை.

ஆனால் இதற்கு முன்னால் அவர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய வீட்டிற்கு வருவார்கள், என்னோட சில நேரங்களில் விளையாடுவார்கள், எனக்கு சொக்லேட் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.

காலங்கள் கடந்து எனக்கு 12 வயது ஆனது மற்ற சிறுமிகள் போலவே சைக்கிளில் நானும் பள்ளிக்கு சென்றேன். நான் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் தெரு முனையில் உள்ள ஒரு ஆண் தினமும் நின்றுகொண்டு, என்னை பார்த்துக்கொண்டிருப்பான்.

என்னை விழுங்குவது போன்று பார்க்கும், அவனது அருகில் சென்று கன்னத்தில் ஒரு அறை கொடுக்க வேண்டும் என்று தோன்றும்.

ஆனால் எனது கோபத்தை உள்ளடக்கி கொண்டு, அத்தனை கோபத்தினையும் சைக்கிள் பெடல் மேல் காட்டி, அதனை வேகமாக அழுத்திகொண்டு பள்ளிக்கு சென்றுவிடுவேன்.

அதன் பின்னர் கல்லூரிக்கு செல்லும் வயதை எட்டினேன். கல்லூரிக்காக பேருந்தில் செல்கையில், ஆண்களின் காமப்பெருமூச்சுகள் என்னை சுட்டெரிக்கும்.

என்னதான் நாகரீமான ஆடைகளை அணிந்துசென்றாலும், அவர்களின் காமப்பார்வைகள் என்னைபோன்ற கல்லூரி பெண்களின் அங்கங்களை துளைக்கும்.

இதன் காரணமாக எனது வாழ்வில் பல்வேறு தியாகங்களை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

எனது வாழ்வில் நான் சந்தித்த பாலியல் துன்பங்களின் காரணத்தினாலேயே, எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

ஏனெனில் நான் எனது வாழ்வில் சந்தித்த சோதனைகளை அவளுக்கு புரியவைத்து, சமுதாயத்தில் அவள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக.

ஆனால், எனக்கு மகனாக நீ பிறந்துள்ளாய். இருப்பினும் இந்த சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கு நீ மரியாதை செலுத்த வேண்டும். பெண்களை ஒருபோது எதிரிகளாக பார்க்ககூடாது. அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

பெண்கள் நம்பிக்கையான நல்ல நண்பர்களாக இருப்பார்கள், நீ எனக்கு மரியாதை கொடுக்கிறாய் என்றால், அது சமுதாயத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு மரியாதை கொடுப்பதற்கு சமம் என எழுதியுள்ளார்.

follow in facebook

காலையில் எழும் போது செய்யக்கூடாத விஷயங்கள்


தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். இதுகுறித்து ஆன்மீக குரு மோகன்ஜி கூறுவதாவது, காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என்கிறார். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.



பொதுவாக காலையில் எழும் போது, தமது தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை 4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம்.

காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். மேலும், அதன்பின்னர் காப்பி, டீ போன்ற தேனீர் குடிப்பது உடலுக்கு தீங்காகும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது.

காலை எழுந்த உடன் நமது கைப்பேசியிலோ அல்லது, கணிணியிலோ வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்ற சொடுக்குகளை எழுந்த உடனே பார்பதை தவிர்ப்பது நல்லது. காலை பொழுதில் நமது சிந்தனைகளை மிக முக்கிய வேலைகளிலே செய்வது பலனாகும். இதில் நாம் 20:20:20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். அவை 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும் எடுத்துக்காட்டாக காலையிலே செய்திகளை படித்து அறிவது ஒரு சிறந்த முறையாகும்.

காலை உணவை தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது, அதனை சரி செய்யவே காலை உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அவசியமான ஒன்று. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படும். இது நம் முன்னோர்கள் கூறும் முக்கியமான உணவுப் பழமொழி 'காலையில் ராஜாவைப் போல சாப்பிட வேண்டும்' 'மதியம் அளவரசனைப் போல சாப்பிட வேண்டும்' 'அரவில் பிச்சைக்காரரர்களை போல சாப்பிட வேண்டும்' என்று கூறியுள்ளனர். காலையில் பயிர் வகைகள், பிரெட் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

பொதுவாக அதிகாலையில் கண்விழிப்பது மிகவும் நல்லது. மேலும் பலர் போக்குவரத்துக்கு இடையே கடும் அவதிகளுக்குள்ளாகி அலுவலகதத்ற்கு செல்வது உண்டு. இவ்வாறு செல்வதால் மனிதர்களின் நேற்மறை ஆற்றலை இழக்கக் கூடும். 10 மணிக்கு முன்னாள் இயற்கையான சூழலை பார்ப்பதும், பறவைகளின் சத்தம், கடலின் ஓசை, மந்ரிரங்களை ஓதுவதும் சிறந்த செயலாகும்.

நமது உணவுகளை தயார் செய்வது பற்றி முன்கூட்டியே முடிவெடுத்து அதனை இரவே தயார் செய்து கொள்வது என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.

பொதுவாக ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனை காலை எழுந்த உடன் செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயல், எனவே அதனை தவிர்ப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதற்கு முன் மற்றவைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்ததாகும்

follow in facebook

உங்களுக்கு தெரியுமா...?

உங்களுக்கு தெரியுமா...?
பின்கோடு என்று அழைக்கப்படும் அஞ்சல் குறியீட்டு எண்கள் அல்லது அஞ்சலகச் சுட்டு எண் (PIN - Postal Index Number) இந்தியாவின் அஞ்சல் சேவைக்காக இந்திய அஞ்சல்துறையினால் ஆகஸ்ட் 15 , 1972 அன்று ஆறு இலக்கங்கள் கொண்ட எண் முறையை ஏற்படுத்தியது.
இந்தியா ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் எண்கள் கொடுக்கப்பட்டன. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது என்பதையும், இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மற்றும் மூன்றாவது எண் வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப்படுத்துகிறது.
இந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது பின்கோடு மண்டலங்கள்:
1 - டில்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஸ்மீர்(பாகிஸ்தான்-ஆளுமை கீழுள்ள காஸ்மீர் உட்பட), சண்டிகார்
2 - உத்திரப் பிரதேசம், உத்தராகண்டம்
3 - இராஜஸ்த்தான், குஜராத், டாமன் டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
4 - மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்
5 - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்
6 - தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி
7 - ஒடிசா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்
8 - பீகார், ஜார்க்கண்ட்
9 - இராணுவ அஞ்சலகம்(APO) மற்றும் கள அஞ்சலகம் (FPO)

 follow in facebook

இப்படிச் சொன்னாத்தானே சின்னஞ்சிறுசுக கிராஸ் கேள்வி கேக்காம அதை ஏத்துக்கும்!

வீட்டுல பெரியவர்கள் யாராச்சும் இருந்தா... பசங்க எதைச் செஞ்சாலும் தொணதொணத்துக்கிட்டே இருப்பாங்க. 'டேய்... நாதாங்கியை (தாழ்ப்பாள்) ஆட்டாதே... சண்டை வரும்'னு மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு மண்டையைக் காய வெப்பாங்க. ஆனா, சொல்ல வந்த விஷயம் வேறயா இருக்கும்... அதோட உட்பொருள் அதி முக்கியமானதாவும் இருக்கும்! இதை நேரடியாவே சொல்லியிருக்கலாம்தான். ஆனா, இப்படிச் சொன்னாத்தானே சின்னஞ்சிறுசுக கிராஸ் கேள்வி கேக்காம அதை ஏத்துக்கும்!

1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.



5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.'

வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

6. 'வீட்டுத் தோட்டத்தில் ஆமணக்கு வளர்த்தால், அதன் காய்கள் வெடித்து விதைகள் சிதறுவதுபோல் குடும்பம் சிதறிடும்.'

ஆமணக்கு காய் முற்றியவுடன், அதன் விதைகள் கீழே சிதறிக்கிடக்கும். தெரியாமல் சிறுபிள்ளைகள் சாப்பிட்டால் தொண்டையில் சிக்கிக் கொண்டு விபரீதமாகிவிடும். அதனால்தான் அதை வீட்டுக்கு அருகில் வளர்க்கக் கூடாது.

7. 'பஞ்சு பறந்தா... பணம் பறக்கும்.'

வீட்டில் தலையணைக்காக இலவம் பஞ்சு வாங்கி வந்து அடைப்போம். அப்போது, அதைக் கண்டபடி பறக்கவிட்டு விளையாடுவார்கள் குழந்தைகள். அப்படி பறந்தால்... விலை உயர்ந்த பொருளான இலவம் பஞ்சு வீணாகி பணத்துக்குதான் வேட்டு. அதேபோல, சுவாசத்தின் மூலம் உடலுக்குள் போய் வைத்திய செலவை வேறு இழுத்து வைக்கும்.

8. 'வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'

புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.

9. 'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

10. 'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'

புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.

11. 'முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'

மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்.

12. 'தோட்டத்தில் முதல் வெள்ளாமையாக தென்னை வைக்கக் கூடாது.'அது காய்ப்புக்கு வந்து பலன் கொடுக்க ஆண்டுக் கணக்கில் ஆகும். அதற்குள் 'அடச்சே' என்று வெறுத்துவிடும். எனவே, சீக்கிரமாக பலன் கொடுக்கும் பயிர்களை ஆரம்பத்தில் பயிர் செய்வது நல்லது.

புரியும் புதிர்கள்!

கிராமப்புறங்களில் எல்லாவற்றுக்குமே ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிடுவார்கள். பல சமயங்களில் அது நம்ப முடியாததாகக்கூட தோன்றும். ஆனால், உண்மையை அலசி ஆராய்ந்து பார்த்தால்... அத்தனையும் சொக்கத் தங்கம் என்பீர்கள்!

13. 'தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'

சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

14. 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'

பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

15. 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

16. 'அதிகாலையில் முங்கிக் குளி.'

சூரியன் உதிக்காத, பனி விலகாத சமயத்தில்தான் நீர் நிலைகளின் மேற்பரப்பில் ஓசோன் படலம் இருக்கும். அதனால் முங்கிக் குளிக்க வேண்டும். அப்போது, அந்த ஓசோன் படலத்தை சுவாசிக்கும்போது, அது நம்முடைய மூச்சுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

17. 'ஏகாதசி விரதம் இருப்ப வர்கள், அதை முடிக்கும்போது அகத்திக்கீரை சாப்பிட வேண்டும்.'அகத்திக்கீரைச் சாப்பிட்டால், விரதத்தின் காரணமாக வயிற்றில் ஏற்படும் புண்கள் ஆறுவதோடு, வயிற்றிலுள்ள புழுக்களும் இறந்துபோகும்.

18. 'விசேஷங்களின்போது வாழை மரம், மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும்.'

மரம், செடிகளெல்லாம் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவைக் கொடுக்கும். விசேஷம் நடக்கிற இடங்களில் பலர் கூடும்போது வெளிப்படும் வியர்வை, மூச்சுக் காற்று போன்றவற்றை மாவிலை தோரணமும் வாழை மரங்களும் கிரகித்துவிடும்!

19. 'வெள்ளி, செவ்வாய் சாம்பிராணி போட வேண்டும்.'

வாரம் இரு தடவை இப்படிச் செய்வதன் மூலம்... சாம்பிராணி புகை வீடு முழுக்க பரவி... விஷ ஜந்துக்கள், கொசுக்கள் உள்ளிட்டவற்றை விரட்டி அடிக்கும்.

20. 'வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ மறக்கக் கூடாது.'

வெளியில் சென்று திரும்புபவர்களின் கால்களில் தப்பித் தவறி ஏதாவது விஷக் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். நிலைப்படியில் காலை வைத்தால்... அதிலிருக்கும் மஞ்சள் கிருமிநாசினியாகச் செயல்படும்.

21. 'அருகில் எங்காவது இடி இறங்கினால்... 'அர்ஜுனா, அர்ஜுனா' என்று சத்தமாகச் சொல்ல வேண்டும்.'

இடிச் சத்தத்தின் காரணமாக சிலருக்குக் காது அடைத்துக் கொள்ளும். அதைச் சரிசெய்ய, தாடையை சுருக்கி விரிக்க வேண்டும். 'அர்ஜுனா' என்று சொல்லும்போது அது எளிதாக நடந்தேறிவிடும். சொல்லித்தான் பாருங்களேன் - அர்ஜுனா!

22. 'ஊசி கொண்டு இரவில் துணி தைத்தால் தரித்திரம்.'

அந்தக் காலத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் இல்லை. அதனால், ஊசியானது கை மற்றும் நகக்கண்களில் ஏறிவிடும் வாய்ப்பு உண்டு. அத்தகைய வீணான விபத்தைத் தவிர்க்க, இதுதான் வழி!


follow in facebook

Friday, 5 August 2016

IMO பாவிப்பவரா நீங்கள்? அப்படியாயின் இது உங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு கட்டாயம் படியுங்கள்….!

இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன.இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது. போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (Apps) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்திற்கு போட்டியான இன்று பல மென்பொருள் சந்தையில் விடப்பட்டுள்ளன.

அவற்றில் தற்போது பலரின் கவனத்தை ஈர்ந்துள்ள முக்கிய மென்பொருளாக IMO மாற்றம் பெற்றுள்ளது. முகப்புத்தகம் (Face Book), ஸ்கைப் (Skype), டுவிட்டர் (Twitter), வாட்ஸ்அப் (Whatsapp), வைபர், (Viber) போன்று IMO மென்பொருளும் மிகவும் வேகமாகவும், பிரபலமாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது.

அத்துடன் IMO மென்பொருள் தற்போது இரண்டு வகையில் அறிமுகம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. IMO Beta (New version) 10 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. IMO (Old version) 100 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. இவ்வாறு இரண்டு வகையான IMO மென்பொருள்கள் உள்ளன.

IMO பயன்படுத்துவதன் நன்மைகள்
ஆரம்ப காலங்களில் ஸ்கைப் (Skype) மென்பொருளை பயன்படுத்தியவர்களுக்கு IMO பயன்படுத்துவது இலகுவாக உள்ளது. அத்துடன் இணையதளங்களை பயன்படுத்தும் போது செலவிடப்படும் டேட்டா (Data) குறைவாகவே காணப்படும் அதாவது ஸ்கைப்பிற்கு செலவிடப்படும் டேட்டாவை விடவும் IMOவுக்கு குறைந்த அளவிலான டேட்டாவே செலவாகிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மாட்போன்களின் தரைவிறக்கம் செய்து போது சிறியளவிலான கொள்ளளவையே IMO மென்பொருள் எடுத்துக் கொள்கிறது.

அத்துடன் கையடக்க தொலைப்பேசியில் உரையாற்றும் போது வெளியாகும் தெளிவான ஒலியினை வாட்ஸ்அப் (Whats app) மற்றும் வைபர், (Viber) போன்ற வலைத்தளங்களில் பெற்றுகொள்ள முடியாது. எனினும் வாட்ஸ்அப் (Whats app), வைபர், (Viber) வலைத்தளங்களில் உரையாடும் போது தாமதமாகவே ஒளிகளை பெற்றுகொள்ள முடிகின்றது. ஆனால் அவ்விரண்டையும் விடவும் தெளிவான ஒலியினை பெற்றுகொள்ள IMO உதவுகின்றது. அத்துடன் தெளிவான காணொளி அழைப்புகளை (Video call) மேற்கொள்வதற்கு IMO உதவுகின்றது. குறைந்த செலவில் தெளிவாக காணொளி அழைப்புகளை பெற்றுகொள்வதற்கு IMO என்பது மிகவும் சிறந்த ஒரு தொடர்பாடல் மென்பொருளாகும்.

குறைந்த ஒளியில் துல்லியமான காணொளியை மற்றவருக்கும் வழங்கும் வகையில் இதன் கமரா கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்லைனில் அரட்டை அடிப்பவர்களுக்கு (Online chatting) நேரத்தை மகிழ்ச்சியாக போக்குவதற்கு வித்தியாசமான, ஏனைய தொடர்பாடல் வலைத்தளங்களை விடவும் அழகான ஸ்டிகர்ஸ்கள் (Stickers) வழங்கப்பட்டுள்ளன. கண்களை கவரும் நிறங்களில் ஸ்டிகர்களிலே உரையாடல்களை மேற்கொள்ளும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

IMO பயன்படுத்துவதன் போது அதிகளவு நன்மைகள் இருந்தாலும், அதற்கு இணையாக பல தீமைகளும் உள்ளமை மறுக்க முடியாத ஒன்றாகும்.

IMO வின் தீமைகள்….
எவ்வளவு தான் நன்மையான ஒரு பக்கத்தை ஒரு சமூக வலைத்தளம் கொண்டிருந்தாலும் அது பல தீமையான விடயங்களை கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும்.

பொதுவாக தேவையற்ற ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை எமது ஸ்மாட்போனில் பதிவு செய்து வைத்திருந்தால், நாம் IMO மென்பொருளை தரவிறக்கம் செய்து செயற்படுத்தும் வேளையில், நாம் IMO பயன்படுத்துகின்றோம் என்பதை மற்றவர்களுக்கு தன்னிச்சையாக காட்டிக் கொடுக்கும். இதன் மூலம் தேவையற்றவர்கள் எம்மை தொடர்பு கொள்ள நாமே வாய்பை ஏற்படுத்திக் கொடுக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

IMOவில் காணொளி பயன்பாடு மிகவும் இலகுபடுத்தப்பட்டுள்ளமையால், சாதாரண தொடுகையின் மூலம் மற்றவருக்கு காணொளி அழைப்பு செல்லும் அவல நிலை ஏற்படலாம்.

இது பெண்களுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாகும். ஒரு ஆணோ பெண்ணோ தனக்கு நம்பிக்கையானவருக்கு ஒரு அந்தரங்கமான காணொளியை பகிரும் போது, அது தவறுதலாக அனைத்து நண்பர்களுக்கும் செல்லும் ஆபத்தான நிலையும் காணப்படுகிறது.

IMOவை முதன்முறையாக பயன்படுத்துவோர் இது தொடர்பில் அவதானமாக செயற்படுவது நல்லது. இன்றைய காலகட்டத்தில் காதல் எனும் பெயரில் லீலைகள் புரியும் இருபாலாருக்கும் IMO வரபிரசாதமாக அமைந்தாலும், அதுவே அவர்களின் வாழ்வின் முடிவுக்கான ஆரம்ப புள்ளியாகவும் அமைந்து விடுகிறது.

IMO Beta பதிப்பினை பயன்படுத்துவோர் பகிரப்படும் காணொளிகள், புகைப்படங்களை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. அவ்வாறு பதிவு செய்யப்படும் அந்தரங்கமான பல விடயங்கள் மெமரிக் காட் மூலம் இன்னொருவரை சென்றடையக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

முகவரியற்றவர்களை முகப்புத்தகம் ஊடாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் பல இளைஞர்கள், யுவதிகள் IMO எனும் மென்பொருள் ஊடாக அந்தரங்களை பகிர்ந்து அவமானங்களை சுமந்து, தற்கொலை எனும் முடிவை எடுக்கும் படுபயங்கரமான நிலையும் இதன் ஊடாக ஏற்படுகிறது.

பொதுவாக நாம் IMO மற்றும் Whats app மென்பொருள்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் நேரடியாக நாம் அனுப்பு நபரின் தொலைப்பேசிக்கு அல்லது கணனிக்கு செல்வதில்லை. அவை அனைத்து சேவையகத்திற்கு (Server) சென்றதன் பின்னரே தொலைப்பேசி அல்லது கணனிக்கு செல்கின்றது. இன்று வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் காதலர் அல்லது வெளிநாட்டில் தொழில் செய்யும் தங்கள் கணவருக்கு பெண்கள் தங்களின் நிர்வாணப்படங்களை பகிர்கின்றார்கள். இது நேரடியாக அந்த நபருக்கு செல்லாதமையின் விளைவாக பல தற்கொலைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

அத்துடன் இன்று IMOவில் ஒரு புதிய விடயம் ஒன்று உள்ளன. ஒரு நபருடைய கணக்கினை திறந்து பார்க்கும் போது கீழே ஒரு காணொளி குறியீடு காணப்படுகின்றது. அந்த காணொளியில் நமது விரல் தவறுதலாக பட்டாலும் குறுகிய காணொளி ஒன்று மற்றவருக்கு சென்றுவிடுகின்றது. அதனை அழிக்க முடியாது என்பது முக்கிய விடயமாகும்.

அத்துடன் நாம் ஒரு நபருடன் உரையாடல் மேற்கொண்டால் அதனையும் ஒரே நேரத்தில் அழித்து விட முடியாது. அதேபோல் நமது IMO கணக்கினை நாம் அழித்து விட்டாலும் நாம் அனுப்பிய தரவுகள் எதுவும் கணக்கில் இருந்து அழியாது.

நாம் மீண்டு ஒரு கணக்கினை புதிதாக அதே இலக்கத்தில் திறந்தால் பழைய பதிவுகள் எதுவும் அழியாமல் அவ்வாறே இருக்கும். கணக்கினை அதாவது Uninstall செய்தாலும் அந்த கணக்கு அழியாது என்பது இன்று பலருக்கு தெரியாது.

பழைய பதிவுகளை எவ்வாறு அழிப்பது?*
IMO settings என்றதை அழுத்தினால் அதில் Delete chat history யை பயன்படுத்தி அவசியமற்றவைகளை அழித்துகொள்ள முடியும். அதேபோல் IMO கணக்கினை அழிப்பதற்கு IMO account setting சென்று Delete your IMO account என்பதன் ஊடாக உங்கள் கணக்கினை அழித்து கொள்ள முடியும்.

அதேபோல் IMO பயன்படுத்திய அனைவருக்கும் நிச்சியமாக முகம் தெரியாத அழைப்புகள் (Wrong call) வருவது சகஜமான ஒரு விடயம் என்று தான் கூற முடியும். இந்த அழைப்புகள் 80 வீதம் பெண்களுக்கே வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தயவு செய்து அவ்வாறான அழைப்புகளுக்கு பதில் கொடுக்க வேண்டாம். தெரியாத இலக்கம் என்றால் மேல் உள்ள படத்தில் Blocked contacts என்ற ஒரு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் தெரியாத இலக்கத்தை பதிவு செய்து விடுங்கள். தயவு செய்து இணையதளங்களில் உங்கள் அந்தரங்கங்கள் பகிர்வதனை நிறுத்தினால் பாதிப்புகளில் இருந்து ஆரம்பத்திலே காப்பாற்றி கொள்ள முடியும். நன்மைக்காக மாத்திரம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பிரச்சினைகளை தவிர்த்துகொள்ளலாம். அழகு என்றால் ஆபத்துதான் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களும் பொருத்தும் என்பது உறுதியாகியுள்ளது.

Monday, 2 May 2016

இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத மூன்று மம்மிக்கள்..








இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத மூன்று மம்மிக்கள்..

இறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத மூன்று மம்மிக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர.அர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந்த மம்மிக்களை மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு லுல்லைலிகோ மலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. உறைந்த நிலையில் இருந்த அந்த உடல்களில் பாகக்கள் எதுவும் கெட்டுப் போகவில்லை. இரத்தம் உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக அந்த உடல்கள் இருந்திருக்கின்றன. தோல்  கூட புத்துணர்ச்சியுடன் இருப்பது தான் ஆச்சர்யம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மம்மி ரிட்டர்ன்ஸ்... ஏதோ, நோய்வாய்ப்பட்ட சாதாரணப் பெண்ணை டாக்டர்கள் பரிசோதிப்பது போல தோன்றும் இந்தப் போட்டோவில் இருப்பவர் தான் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பனியில் உறைந்து இறந்து போன 15 வயது சிறுமி.

லா டென்சிலா... நாகா கதைகளில் வருவது போல மதத்தின் பெயரால், பனியில் புதைக்கப்பட்ட இச்சிறுமிக்கு ' லா டென்சிலா', அதாவது திருமணமாகாத இளம் பெண் என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்

புதையலாய் கிடைத்தவர் டென்சிலா... 1999ல் அர்ஜெண்டினாவில் உள்ள லுல்லைலிகோ எனும் இடத்தில் சுமார் 6739 மீட்டர் ஆழத்தில் டென்சிலா கண்டெடுக்கப்பட்டார்.

நேர்த்திக்கடன்... இன்கா இனத்தைச் சேர்ந்த இப்பெண் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டு, கடவுளுடன் வாழ ஆசைப்பட்டு, மதத்தின் பெயரால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார்கள்

குளிர்காற்றே காரணம்... டென்சிலாவின் உடல் உறுப்புகள் எதுவும் அழுகாமல், உடையாமல் அப்படியே இருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள  ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்;. டென்சிலாவின் உடல் உறுப்புகளை ஆராய்ந்து பார்த்த போது, அது சில வாரங்களுக்கு முன்னர் இறந்த உடலைப் போன்று இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கிய உணவு... டென்சிலாவின் முடியை வைத்து, அவர் என்ன மாதிரியான உணவுப் பழக்க வழக்கக்களைக் கொண்டவர் என ஆராய்ந்ததில், இன்கா மக்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணித்தது தெரிய வந்துள்ளதாக ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செழுமையாக்கி.... கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விலங்கு கொழுப்புகள் மற்றும் தானியங்களைக் கொடுத்து அக்குழந்தைகளை அவர்கள் குடும்பத்தார்நன்கு செழிப்பாக்குவார்கள் என கூறப்பட்டுள்ளது.

சைவச் சாப்பாடு... டென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மயக்க மருந்து... டென்சிலாவின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்பதற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவரது மரணம் நிகழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள யூகிக்கின்றனர்;.

கோகோ இலைகள் கொடுத்து... இன்காக்கள் இவ்வாறு அர்ப்பணிக்கப் பட்டவர்களை மலையின் உச்சிக்கு சுமந்து செல்வார்களாம். அந்த மலைப்பயணம் மிகவும் அபாயகரமானதாகவும், சிரமமானதாகவும் அமைந்திருக்குமாம். அவ்வாறு செல்லும் போது வழியிலே நேர்ந்து விடப்பட்டவர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடாமல் தடுக்க, அவர்களுக்கு கோகோ இலைகளைக் கொடுத்து, அவர்களின் சுவாசத்தை சீராக்குவார்களாம்.

உறைய வைத்து பலி... இலக்கை அடைந்தவுடன் குடிக்க ஒரு மருந்து திரவம் தரப்படுமாம். அதன் மூலம் வலி, பயம் மற்றும் எதிர்க்கும் மனோபாவம் இல்லாமல் போய்விடுமாம். பின்னர் அவர்களை உடன் சென்றவர்களே மூச்சுத் திணறச் செய்தோ, தலையில் ஓங்கி அடித்தோ அல்லது பனியில் உறைய விட்டோ பலி கொடுப்பார்களாம்.inca-girl-frozen9

பஞ்சத்திற்காக பலி... நிறைய இன்கா குழந்தைகள் இதுபோல் திருவிழாவின் போதோ அல்லது சாதாரண நாட்களிலோ பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. குறிப்பாக பஞ்சத்தின் போதோ அல்லது இன்காக்களின் சபா அதாவது இன்காக்களின் அரசனின் மரணத்தின் போதோ அதிகமாக் இது நடந்திருக்கலாம். இந்த உயிர் பலிகளுக்கு அவர்கள் வைத்தப் பெயர் 'கபகோசா'.

உறங்கும் தளிர்கள்... இவற்றை 'மம்மிகள்' என்று அழைக்காமல் 'தூங்கும் குழந்தைகள்' என்று ஆராய்ச்சியாளர்கள வர்ணிக்கின்றனர்