Thursday, 23 May 2013

பூமியை காப்போம் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்

பிளாஸ்டிக் பையை ஏன் தவிர்க்க வேண்டும் ?
ஏழு காரணங்கள் :

1 . அழியும் இயற்க்கை வளம்:
பிளாஸ்டிக் என்பது பாலி எத்திலீன் .இது இயற்கை வாயு மற்றும்
பெட்ரோலியத்தில் ­ இருந்து தயாரிக்க படுவது . அமெரிக்கர்கள் ஒரு
வருடத்துக்குஉபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளை செய்ய 1 .2 கோடி பேரல்
எண்ணெய் தேவைபடுகிறது .அப்படியென்றால் ­ உலகம் முழுக்க ????
2 .சுற்றுபுறம் மாசடைதல் :
ஒரு பிளாஸ்டிக் பை நிலத்தில் அழிய ஆயிரம் வருடமும் நீரில் அழிய 450
வருடமும் தேவைபடுகிறது. அவ்வளவு வருடமும் அது என்ன செய்கிறது …. நிலத்தை
அடைத்து கொண்டு ….????
3 . ஒரு சதவிதத்துக்கும் ­ குறைவானஅளவே மறு சுழற்சி செய்யபடுகிறது:
ஆண்டொன்றிற்கு ஒரு மனிதன் 350 -400 பிளாஸ்டிக் பைகளை உபயோகபடுத்துகிற
­ான் . இவையெல்லாம் எங்கே செல்கின்றன என்று யோசித்தீர்களா ?
4 .உயிரினங்களுக்க ­ு ஆபத்து :
மிருகங்களும் கடல் வாழ் உயிரினங்களும் தெரியாமல் பிளாஸ்டிக் பையை உண்டு
இறந்து இருக்கின்றன ! கடல் ஆமைகள் பிளாஸ்டிக் பைகளை jelly fish என்று
நினைத்து உண்டு இறக்கின்றன.உயிரினங்களின் செரிமான குழாயில் இருந்து
கொண்டு செரிமானமாகமாகாத ­தால் அவை இறக்கின்றன !
5 .குழந்தைகள் பாதுகாப்பு :
US consumer product safety commision ஆண்டொன்றுக்கு 25 குழந்தைகள்
பிளாஸ்டிக்கை முகர்ந்து மூச்சு விட முடியாமல் இறப்பதாக தெரிவிக்கின்றது ­
! இதில் பெரும்பான்மை 12 மாதத்துக்கும் குறைவான குழந்தைகள் !
6 .நம் உணவில் கலக்கும் பிளாஸ்டிக் :
பத்து லட்சம் டன் = ஒரு வருடத்தில் தயாராகி தூக்கி எறியப்படும்
பிளாஸ்டிக் பைகளின்அளவு !
ஆடு ,மாடு , கோழி ,மீன் ஆகிய உயிரினங்கள் எதிர்பாராவிதமாக ­ ப்ளாஸ்டிக்கை
உண்பதால் மரணிக்கும் வாயிப்பு ஏற்படும் போது அவற்றை உண்ணும் மனிதனின்
உடலிலும் பிளாஸ்டிக் சேர்கிறது .
7 . வெறும் பன்னிரண்டு நிமிடம் :
ஒரு பிளாஸ்டிக் பை அது தூக்கி எறியப்படும் முன்பு சராசரியாக வெறும்
பன்னிரண்டு நிமிடமே உபயோகபடுத்த படுகிறது .அதன் பின்????? வரும் ஆயிரம்
ஆண்டுகளுக்குஇந்த பூமியில் மிதந்து ,பறந்து நீர்நிலைகளை அடைத்து
வெள்ளபெருக்கை உண்டாக்கி அதன் சேவையை செவ்வனே செய்கிறது
இவையெல்லாம் பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டுமான புள்ளிவிபரம் . இன்னும் நாம்
மினரல் வாட்டர் என்று அருந்துகிறோமே அந்த பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ­
இன்னும் நான் வரவே இல்லை அது இன்னும் பெரிய அசுரன் .ஒன்று நரகாசுரன்
இன்னொன்று பாகாசுரன் ….இவைகளை நாம் முழுமையாக தடை செய்து பூமிக்கு
விடுதலை கிடைத்து பூமி தாய் சீராக சுவாசிக்கும் நாளே உண்மையான தீபாவளி
!!!

--
J.PRABU

Wednesday, 22 May 2013

தெரியுமா உங்களுக்கு

*மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
*200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம் ­.
*நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.
*மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.
*நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
*நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
*ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.
*வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால ­்தான் சுவையை அறிகின்றன.
*மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
*கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண்துளைகள் இருக்கின்றன.
*ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக்காண முடியும்.
*பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக்
கொன்று விடுகின்றன.
*நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
*ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.
*ஒரு பட்டுப்புழுவின் ­ கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.
*ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
*புழுவை இரண்டாகத் துண்டித்துப்போட்டாலும் அது சாகாது.
*சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்த ­ில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.
*நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளைஉடை தான்.
*ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.
*வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.
*ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.
*வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், ­ தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.
*கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.
*கிறிஸ்தவர்களின ­் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார் ­.
*எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.
*"O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.
*பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.
*அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம்
'குல்மார்க்'-ல் ­ உள்ளது.
*நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார் ­.
*குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23
*வரிக்குதிரையின ­் ஆயுட்காலம் 22 வருடங்கள்
*அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்
*செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்
*சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்
*பெருங்கரடியின் ­ ஆயுட்காலம் 20வருடங்கள்
*தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்
*பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
*திமிங்கிலத்தின ­் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்
*கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்
*மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை
*பாலைவனக்கப்பல் ­ என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்
*ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை
*பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
*தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை


--
J.PRABU