இது நடிகர் அஜித்தை பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரை அல்ல அஜித்
பற்றிய சில உண்மை வரிகள்:யார் பின்பலமும் இல்லாமல் தமிழ் சினிமா துறைக்கு
வந்த இளைஞன் . மெக்கானிக்காக இருந்த இவர் பைக் ஓட்டுவதில் பிரியர் . பைக்
ரேஸில் சேர பணத்துக்காக திரைத்துறையை தேடிவந்தவர் . பல இடம் தனியாக ஏறிபல
அவமானங்களுக்கு பின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும் இவர் வசன உச்சரிப்பு யாருக்கும் பிடிக்கவில்லை , பல
இயக்குநர்களின் வீட்டில் வாட்ச்மேன் போல காத்துகிடந்து வாய்ப்பு பெற்று
தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். நடித்ததிற்கு சம்பளம் கேட்டு
இயக்குநர்கள் வீடு தயாரிப்பாளர்வீடு என பகல் இரவாக அலைந்தார். பின்
கிடைத்த பணத்தை வைத்து ரேஸில் சேர்ந்தார் .
ரேஸில் மிக பெரிய விபத்துநடக்க பல அறுவை சிகிச்சைகளோடு
உயிர்திரும்பினார். பின் ரேஸ் ஆசையை விட்டுவிட்டு நடிப்பை
தேர்ந்தெடுத்தார்.
.
அவர் நடித்த ஆசை படம் மூலம் நல்ல நடிகன் என்ற பெயர் பெற்றார். தொடர்ந்து
பல தோல்வி படங்கள் சில வெற்றிபடங்கள் கொடுத்தவந்தார்.ஆனாலும் இவருக்கு
வசனமே வராது என்று பல நக்கலடித்தனர். பின் வாலி படம் மூலம் தன் கண்களும்
வசனம் பேசுமடா என்று சொல்லாமல் கூறி அந்த நடிப்புக்காக விருதுகளை
பெற்றார்.
ரசிகர் கூட்டம் உருவாகியது.நாளடைவில் அஜித்தை தல என்று ரசிகர்கள் கூப்பிட
ஆரம்பித்தனர். பல திரைப்படங்களுக்காக தென்னிந்திய ஆஸ்கார் என்றழைக்கபடும்
பிலிம்பேர் விருதுகளை பெற்றார்.
அதிக விருதுகளை வென்ற ஒரே இளம் கதாநாயகன் என்ற சிறப்பை பெற்றார். தன்
காதலி நடிகை ஷாலினி அவர்களை திருமணம் செய்துகொன்டார்.கார் ரேஸில் கலந்து
பல பதக்கங்களை வென்றார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
பல அறுவை சிகிச்சைக்கு பின்னரும் தன் படங்களில் வரும் உயிருக்கு ஆபத்தான
சன்டை காட்சியில் டூப் போடாமல் நடித்தார்.
பின் திடிரென்று ரசிகர்கள் நலன் கருதி ரசிகர் மன்றங்களை கலைத்தார் .
அப்போது இனி அஜித் அவ்ளோதான் என்ற பலர் கூறினர். கலைத்தாலும் அவரது 50வது
திரைபடத்திற்கு
கூடிய கூட்டத்தை பார்த்து தமிழ்திரையுலகம்மிரண்டுபோனது.
திரைதுறையில் ரஜினிக்கு பின் அதிகம் ரசிகர்களை கொண்டவர். நல்லமனம் கொண்ட மனிதன்
ரசிகனை சுயநலத்துக்காக பயன்படுத்தாமல் அவன் வாழ்க்கையில் அக்கறை கொண்ட ஒரே நடிகர்.
எங்கும் எதற்கும் பயப்படாதவர்.நேர்பட பேசும் தைரியசாலி. இதை தவிர
ஹெலிகாப்டர்ஒட்டுவதற்கு லைசென்ஸ் வைத்துள்ளஒரே ஆசிய நடிகர் என்ற சிறப்பை
பெற்றவர்.
அன்று எவர் துணையும் இல்லாம் சினிமாவுக்கு வந்த அஜித் இன்று
தமிழ்நாட்டின் தாரக மந்திரமான தலயாக திகழ்கிறார்
--
J.PRABU
Sunday, 21 July 2013
Thursday, 18 July 2013
A Awesome Story
ஒரு சின்ன கற்பனை.
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.
பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில்
86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து
எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின்
செலவிற்காக 86400 ரூபாய்வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கிஇந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல்
நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக்
கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.
இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும்
வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்
இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால் அவ்வளவு பணத்தையும்
உங்களுக்காக மட்டுமேசெலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -
அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து
உபயோகிப்பீர்கள்தானே?
உண்மையில் இது ஆட்டமில்லை - நிதர்சனமான உண்மை
ஆம்
நம் ஒவ்வொருவருக்கும் இப்படியானஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான்
அதை கவனிக்கவில்லை.
அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் - காலம்.
ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின் அதியுன்னத
பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து
வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான்.
நேற்றைய பொழுது போனது போனது தான்.
ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில்
86400நொடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும்.
அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான
பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?
இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம்
கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.
எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் - சந்தோஷமாக இருங்கள்
-சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

Subscribe to:
Posts (Atom)