மகன் : அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?
தந்தை : கண்டிப்பா.. என்ன கேளு..?
மகன் : 1 மணி நேரத்திற்கு எவ்ளோ சம்பாரிப்பிங்க ?
தந்தை : அது உனக்கு தேவை இல்லாத விஷயம், நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?
மகன் : சும்மா தெரிஞ்சிக்கத்தான்சொல்லுப்பா
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன்
மகன் : "ஓ (தலைகுனிந்தவாறே) அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"
தந்தைக்கு கோபம் வந்தது ...
தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??
ஒழுங்கா போய் படுத்து தூங்கு நான் இங்க உங்களுக்காக நாய் போல
உழைக்குறேன்..."
அந்த சின்னப்பையன் அமைதியா அவன்
படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..
அவன் தந்தை மகனின்
கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார். 1 மணிநேரம் சாந்தம்
அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று
முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ...
தந்தை : "தூங்கிட்டியாடா?"
மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான்
இருக்கேன் ..."
தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள்
பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ
கேட்ட 50 ரூபாய் .."
அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் ..
மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "
அப்புறம் அந்த
பணத்தை எடுத்து தலையணை அடியில்
வைக்க போகும்
போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள்
இருந்தன ..
அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் ..
அந்த சிறுவன் மெதுவாக
பணத்தை எண்ணி சரிப்பார்தான் ...
பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...
தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் ....
அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."
மகன் : "ஏன்னா தேவையான பணம் என்
கிட்ட இல்ல ...
இப்போ இருக்கு ....
கேளுங்கப்பா இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு ....
இதை நீங்களே வச்சிக்கோங்க இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா
? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்குவாங்க நான் உங்ககூட சேர்ந்து
இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ...
அதைக் கேட்டு ஒரே ஷாக்... விறைத்துப் போய் நின்றார். அப்போது தான்
உணர்ந்தார், மேலும்ஒரு கடமை மீதமிருந்தது, தன் குடும்பத்திற்காக.
அன்புக்கு அங்கு தேவை இருந்தது.
தனது குடும்பத்திற்காக ஒரு சில நிமிடங்களை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
வாழ்வதன் அர்த்தம் புரியவரும், உழைப்பின் பெறுமானம் தெரியவரும், அன்பின்
தேவை உணரப்படும் போது.
--
J.PRABU
Friday, 14 June 2013
Wednesday, 5 June 2013
நீதிக்கதை
கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப்
போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர்,
"மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப்
போனால் வெற்றி நிச்சயம்" என்று சொன்னார்.
கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி
உஷாராகிவிடுவான் . அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான்
வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது.
தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.
தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். "எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே,
நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல
முடியுமா?" என்று கேட்டான்.
"இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன ்" என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, "இந்த
விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?" என்று
கேட்டான்.
ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. "முடியும்.. முடியும்"என்று அலறினார்.
"அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும்
உங்களால் பொய்யாக்க முடியும்" என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.
கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.
வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை
வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக்
கனிந்து வரும் வெற்றிக்கனி

Tuesday, 4 June 2013
உதவிசெய்து வாழ்வதே சொர்க்கம்
ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன்.
ஆனால் யாருக்கும் உதவமாட்டான்.
அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது.
ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்கு க்
கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்.
முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில்
பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க
பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு,
சுவைமிக்க உணவுபரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில்எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையைநீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே
தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.
அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.
அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி
அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக்கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந ்தது.
அங்கு இருந்தவர்களுக்க ும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள்
வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை. ஆனால் -
அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே
இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி
எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவ ா?
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின்
வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான். ஒருவருக்கொருவர் உதவிசெய்து வாழ்வதே
சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும்சுகமாய் வாழ
நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும்
உதவிகள்பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்

Sunday, 2 June 2013
மனித உறவுகள் மேம்பட.....
1.தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். (Ego)
2. அர்த்தமில்லாமில ும்,தேவையில்லாம ிலும் பின் விளைவு அறியாமலும்
பேசுக் கொண்டேயிருப்பதை விடுங்கள். (Loose Talks)
3.எந்த விசயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள். (Diplomacy)
4.விட்டுகொடுங்க ள். (Compromise)
5.சில நேரங்களில் சில சங்கடங்களைசகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
(Tolerate)
6.நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள்.
(Adamant Arguments)
7.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் . (Narrow Mindedness)
8.உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே
சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying
Tales)
9.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள்.
(Superiority Complex)
10. அளவுக்கு அதிகமாய்,தேவைக் கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள் . (Over Expectation)
11.எல்லோரிடத்தி லும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ
இல்லையோ சொல்லிகொண்டிருக ்காதீர்கள்.
12.கேள்விப்படுக ிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள ்.
13.அற்ப விசயங்களையும் பெரிதுபடுத்தாதீ ர்கள்.
14.உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியா ய் இல்லாமல், கொஞ்சம்
தளர்த்திக்கொள்ள ுங்கள். (Flexibility)
15.மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள். (Missunderstand ing)
16.மற்றவர்களுக் கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை
பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)
17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும்கூட
நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
18.பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தைய ும், தேவையில்லாத
மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும்
காட்டுங்கள்.
19.அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள். (Frankness)
20.பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று
காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.(Initiative)
21. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.
பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும

Subscribe to:
Posts (Atom)